*இமாம்களின் வாழ்க்கைக் குறிப்பு* – 05
\\*இமாம் இப்னுமாஜா*\\
*முழுப்பெயர்*: முஹம்மது இப்னு யஸீது அர்ரபீஃ அல்கஸ்வீனி (சுனன் இப்னுமாஜா ஹதீஸ் நூலைத் தொகுதத்தவர்)
*புனைப்பெயர்*: அபு அப்துல்லாஹ் இப்னுமாஜா அல்ஹாஃபிழ்
*இயற்பெயர்*: முஹம்மது
*தந்தை பெயர்*: யஸீது
*பிறந்த ஊர்*: கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார்.
*பிறப்பு*: ஹிஜ்ரி 209ம் ஆண்டு.
*கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்*: இராக்கில் உள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் மக்கா, ஷாம், எகிப்து, ஹிஜாஸ், ரயீ, பஸரா போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்துள்ளார்.
*இவர் தொகுத்த நூல்கள்*:
*சுனன் இப்னுமாஜா*
*தஃப்ஸீருல் குர்ஆன்* (குர்ஆன் விரிவுரை)
தாரீகுல் கஸ்வீன்
போன்ற பல நூல்களை தொகுத்துள்ளார்.
*இவரது ஆசிரியர்கள்*:
இப்னு அபீஷைபா, இப்னு தக்வானில் காரியீ, அஹ்மத் இப்னு ஸாபிதில் ஜஹ்தரீ, அலீ இப்னு முஹம்மதித் தனாஃபுஸீ, முஸ்அப் இப்னு அப்தில்லாஹ் ஸபீரீ, இப்ராஹீம் இப்னு முன்திரில் ஹஸாமீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.
*இவரது மாணவர்கள்:*
ஜஃபர் இப்னு இத்ரீஸ், முஹம்மது இப்னு ஈஸஸ் ஸஃபாரீ, இஸ்ஹாக் இப்னு முஹம்மதுல் கஸ்வீனீ, சுலைமான் இப்னு யஸீது, அபூஅம்ர் அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு குஹைமில் மதீனீ, இப்ராஹீம் இப்னு தீனாரில் கவ்ஷபீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.
*இறப்பு*: ஹிஜ்ரி 273ம் ஆண்டு ரமலான் மாதத்தில் திங்கட்கிழமை அன்று மரணித்து புதன்கிழமை அடக்கம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 64.