இப்ராஹீம்

 

இறைவன் எத்தகைய சோதனைகள் வைத்தபோதும் அதில் வென்றார் – 2:124, 2:131

 

கஅபாவை மறு நிர்மாணம் செய்தார் – 2:127, 14:35, 22:26

 

இப்ராஹீமின் வழி தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாகவும் இருந்தது – 2:130, 2:135, 3:68, 3:95, 4:125, 6:161, 16:123

 

கொடுங்கோல் மன்னனிடம் அறிவுப்பூர்வமாக வாதிட்டுப் பிரச்சாரம் செய்தார் – 2:258

 

இவருக்கு இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினான் – 2:260, 21:68-70, 29:24, 37:97-98

 

தந்தையின் தவறான கொள்கையை உறுதியுடன் எதிர்த்தார் – 6:74, 9:114, 19:42-49, 26:70-80, 37:85-89

 

அறிவுப்பூர்வமாக மனதில் பதியவைக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டார் – 6:76-79

 

முஹம்மத் (ஸல்) மட்டுமின்றி இஸ் ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித்தோன்றல்களே – 4:163, 6:84, 29:27

 

தள்ளாத வயதில் இஸ்மாயீல், இஸ்ஹாக் இருவரையும் பெற்றார் – 11:71,72,73, 14:39, 15:53, 15:54, 15:55, 51:29

 

இறை உத்தரவுப் படி மனைவியையும் பச்சிளம் பாலகன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டார். இவ்விருவர் மூலமே மக்கா நகரம் உருவானது – 14:37

 

தனி நபராகிய இவர் ஒரு சமுதாயமாக இருந்தார் – 16:120

 

சிலை வணக்கத்திற்கு எதிராகக் கடும் போக்கை மேற்கொண்டார் – 21:52-67, 37:91-96, 60:4

 

ஹஜ் செய்ய மக்களுக்கும் அழைப்பு விடுத்தார் – 22:27

 

இறைக் கட்டளைக்கேற்ப மகனையும் அறுக்கத் துணிந்தார் – 37:102-108

 

இவர்களின் வழித்தோன்றல்களில் ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலம் இறைவன் வழங்கியிருந்தான் – 4:54

 

இவர் கஅபா ஆலயத்தைக் கட்டுவதற்காக தங்கியிருந்த இடம் மகாமே இப்ராஹீம் எனப்படுகிறது – 2:125, 3:97

 

மனிதர்களில் இறைவன் நண்பனாக்கிக் கொண்டது இவரை மட்டுமே – 4:125

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *