இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?
இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள் தாராளமாக வெளியில் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் வீணாக ஊர் சுத்துவது கூடாது.
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (“இத்தா‘வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார்.
ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், “ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம் (2972)