இதுதான் நபித்தோழர்களின் அன்றாட நிலை
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்.
நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம்.
ஏனெனில், எங்களுடன் வயதான பெண்மனி நட்பாக இருந்தார்கள். அவர்கள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த சில்க் என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி,
அவற்றைத் தன்னுடைய பாத்திரமொன்றில் போட்டு, அவற்றுடன் வாற்கோதுமை விதைகள் சிலவற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவார்கள்.
நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்தக் வயதான பெண்மனிநை சந்திப்போம். அவர்கள் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவார்கள்.
இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக் கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸாத் (ரலி),
நூல் : புஹாரி 2349
அற்பமான இந்த கீரை வகை உணவு கூட பெரிதாக நினைத்து அனைவரும் ஆர்வத்துடன் பருகுவார்கள் என்றால் எந்தளவிற்கு அவர்கள் உணவிற்காக கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்வுடைய மார்கத்தை ஏற்றுக் கொண்ட சஹாபாக்கள் அவர்களின் வாழ்கையில் அனைத்து விஷயங்களிலும் தியாக மனப்பான்மை கொண்டவர்களாக அவர்களின் வாழ்கையை அமைத்துக் கொண்டார்கள். நாமும் சஹாபாக்களின் வாழ்கையின் மூலம் நிறைய பாடங்களையும் படிப்பினைகளையும் பெறுவோமாக
————————
ஏகத்துவம்