இஜ்திஜாத்–اجتهاد–ஆய்வு
சரியான தீர்ப்பளிப்பவர்
7352- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ ، حَدَّثَنَا حَيْوَةُ ، حَدَّثَنِي يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ ، عَنْ أَبِي قَيْسٍ مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ ، عَنْ عَمْرِوبْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதிபதி தீர்ப்பப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு.
அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: புகாரி 7352
மேற்கூறப்பட்ட ஹதீஸில் ஆய்வு செய்து சரியாக தீர்ப்பளிக்க கூடிய நீதிபதிக்கு இரண்டு மடங்கு கூலியுண்டு என்று நபிகளார் கூறியுள்ளார்கள். இது மக்களிடையே ஏற்படும் குடும்ப மற்றும் சொத்து பிரச்சினைகள் தொடர்பாக தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இருந்தாலும், மார்க்க தொடர்பான சந்தேகங்களை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி, சரியான தீர்ப்பை வழங்குபவராக இருந்தாலும் சரி இரண்டுவகை நீதிபதியையும் இது குறிக்கும்.
இறை நம்பிக்கையில்லாத எந்த நீதிபதிக்கும் இரு மடங்கு நன்மைகள் கிடைக்காது.
ஏனெனில் இறைவனிடத்தில் நற்கூலி பெற வேண்டுமென்றால் அவனை சரியான முறையில் நம்பி அவனுக்கு கட்டுப்பட வேண்டும். ஒரு எஜமானிடம் வேலை செய்யாமல் அவனிடமிருந்து சம்பளம் பெற வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானதோ அதுபோலத்தான், இறைவனுக்கு கட்டுப்படாமல் அவனிடம் கூலி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவ்வளவு முட்டாள் தனமானதாகும். எனவே முஸ்ம்களல்லாத நீதிபதிகளுக்கு இருமடங்கு கூலி கிடைத்து விடாது.
ஆனால் மார்க்கச் சட்டங்களை ஆய்வு செய்து சரியான தீர்ப்பளிப்பவராக இருந்தால் அவர் இரட்டிப்புக் கூலியை பெறும் பாக்கியசாயாக ஆகிவிடுகின்றார்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும். மார்க்க சட்டங்களை ஆய்வு செய்து தவறாக தீர்ப்பளித்து விட்டால் அவரை ஏதோ கடும் குற்றவாளியைப்போல மக்கள் கருதுகின்றனர்.
இவ்வளவு காலம் இந்த விஷயத்தில் தவறாக தீர்ப்பளித்து விட்டீர்களே இதுநாள் வரையிலும் உங்கள் தீர்ப்பை ஏற்று நடந்து, அந்த நிலையிலேயே மரணித்து விட்டால் அதற்கு யார் குற்றவாளி, தவறாக தீர்ப்பளித்த நீங்களல்லவா குற்றவாளி என்று தங்களை அதிபுத்திசாயாக நினைத்து இவ்வாறு முட்டாள் தனமான கேள்வியை எழுப்புகின்றார்கள்.
மார்க்கத்தை ஆய்வு செய்து தவறாக தீர்ப்பளித்து விட்டால் அவருக்கு நன்மை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை இதுபோன்று குறைகூறுபவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
——————-
ஏகத்துவம்