_________________

*அழைப்புப் பணி*

———————-

அன்றைய அரபுகளில் ஒட்டகங்களில் *உயர்ந்த ரக ஒட்டகமான செந்நிற ஒட்டகத்தை* மதிப்பிட்டிருந்தார்கள். ஒருவர் செந்நிற ஒட்டகத்தை வைத்திருந்தால் அது அவருக்குப் பெருமையாக இருக்கம். இதை வைத்துக்கொண்டு *ஒருவருக்கொருவர் பெருமையடித்துக்* கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *உம் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழியளிப்பது சிவப்பு ஒட்டகைகளை விட உங்களுக்குச் சிறந்ததாகும்.*

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ர­லி),

நூல் : *புகாரி 4210*

*அல்லாஹ்வை நோக்கி அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லி­ம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்*

அல்குர்ஆன் *(41:33)*

பெருமானார் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன்னால் மக்கள் திரண்டிருந்த நேரத்தில் நான் உங்களுக்கு இம்மார்க்கத்தை எத்திவைத்துவிட்டேன். *சிறிய செய்தியாக இருந்தாலும் அதை என்னிடமிருந்து மக்களுக்கு நீங்கள் எத்திவைத்துவிடுங்கள்* என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் *என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதை(பிறருக்கு) எடுத்துரையுங்கள்.*

அறிவிப்பவர் : *அப்துல்லாஹ்* பின் அம்ர் (ரலி­),

நூல் : *புகாரி 3461*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் *யார் (மக்களை) நேரான வழியின் பால் அழைக்கிறாரோ! அவருக்கு அதை பின்பற்றுபவரின் கூலிகளைப் போன்ற கூ­லி­ கிடைக்கும். இவ்வாறு கொடுப்பது அதை செய்தவர்களின் கூ­லி­யி­ருந்து கொஞ்சம் கூட குறைத்துவிடாது.*

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி),

நூல் : *முஸ்லி­ம் 4831*

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *