*அல்லாஹ் மறுமை நாளில் எந்த மொழியில் கேள்வி கேட்பான்?*

*அறிந்திருக்கவில்லை*

மறுமை நாளில் இறைவன் எல்லோரிடமும் நேரடியாகப் பேசுவான். அவனுடைய பேச்சை எல்லோரும் அறிந்து கொள்வர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

*உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் (மறுமை நாளில்) பேசாமலிருக்க மாட்டான். அப்போது அல்லாஹ்வுக்கும், அடியானுக்கும் இடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார்; தடுக்கின்ற திரையும் இருக்காது.*

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல் : *புகாரி 7443*

*இறைவன் குறிப்பிட்ட இந்த மொழியில் தான் மறுமையில் பேசுவான் என எந்த விவரமும் குர்ஆன், ஹதீஸில் சொல்லப்படவில்லை.*

எனவே மறுமையில் அவரவருக்குத் தெரிந்த மொழியில் இறைவன் பேசலாம். அல்லது மறுமையில் *ஏதாவது ஒரு மொழி பற்றிய ஞானத்தை இறைவன் எல்லோருக்கும் வழங்கி அந்த மொழியில் அவர்களிடம் பேசலாம்*.

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *