•••••••••••••••••••••••••••••••••••••••••

*அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயல்கள்*

••••••••••••••••••••••••••••••••••••••••••

நான் நபி (ஸல்) அவர்களிடம்,

*அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் எது?’’* என்று கேட்டேன்.

அவர்கள், *உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றார்கள்.

பிறகு எது? என்று கேட்டேன். *தாய் தந்தையருக்கு நன்மை புரிவது’’* என்றார்கள்.

பிறகு எது? என்றேன். அவர்கள், *அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’’* என்று பதிலளித்தார்கள்.

இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: *புகாரி (527)*

•••••••••••••••••••••••••••••••••••

*நபிகளாரின் பரிந்துரைக்குத் தகுதியானவர் யார்?*

•••••••••••••••••••••••••••••••••••

*அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?* என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன்.

அப்போது, *அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்* என்று…..

நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, *மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதிபெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை’ (லாயிலாஹ இல்லல்லாஹ்)* என்று சொன்னாரோ அவர்தாம்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: *புகாரி (99)*

————————————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *