*அல்லாஹ்வின் பெயர்களை மனிதர்களுக்கு வைக்கலாமா?*
அல்லாஹ்வுடைய பெயர்களில் மனிதர்களுக்கும் வைக்க முடியுமான பெயர்களும் உண்டு. அந்தப் பெயர்களில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகாத வகையில் அவனுக்கே உரிய தகுதியில் இருக்கிறான்.
ரஹீம்–இரக்கமுள்ளவன் (முஃமின்களுடன் அவர் இரக்கமுள்ளவராக இருப்பார் என்று நபியவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்)
அல்லாஹ் தனக்கும் ரஹீம் என்கிறான், நபியவர்களுக்கும் ரஹீம் என்று சொல்வதால் நபியவர்கள் அல்லாஹ்வுக்கு ஒப்பாகுவார்கள் என்று அர்த்தம் கிடையாது.
*மனிதர்களுக்கும் இரக்கம் என்ற பண்பு உண்டு ஆனால் அல்லாஹ்வுடைய இரக்கம் என்பது தனித்துவமானதாகும்.*
அந்த அடிப்படையில் *ரஊப், மலிக், ஜப்பார்* போன்ற பெயர்களை மனிதர்களுக்கு வைப்பதில் தவறில்லை.
*ரஸ்ஸாக்*- *உணவளிப்பவன்* போன்ற பெயர்களை மனிதர்களுக்கு வைக்க முடியாது. *உணவளிப்பது என்பது இறைவனுக்கே உரிய ஒன்று.*