\\*அல்லாஹ்விடமே கேள்*\\
————————————

இப்னு அப்பாஸை அழைத்து “சிறுவனே! உனக்கு நான் *சில உபதேசங்களைக்* கற்றுத் தருகிறேன். அதன் மூலம் *அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்*” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

“நீ *அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக* நடந்துகொள். *அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்*. அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். *அவனை நீ உன்னுடன் காண்பாய்.*

🔸நீ *சந்தோஷமாக இருக்கும் போது* அல்லாஹ்வை நினைத்துப் பார்.

🔸(உனக்கு) *சிரமம் வரும் போது* அல்லாஹ் உன்னை நினைப்பான்.

🔹கேட்பதாக இருந்தால் *அல்லாஹ்விடமே கேள்*.

🔹நீ உதவி தேடுவதாக இருந்தால் *அல்லாஹ்விடமே உதவி தேடு*.

நிச்சயமாக (இந்த) சமுதாயம் *உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும்* அல்லாஹ் உனக்கு எதை *விதியாக்கி விட்டானோ அதைத் தவிர* வேறெதனாலும் அவர்கள் *உனக்கு நன்மை செய்துவிட* முடியாது.

அவர்கள் *உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும்* அல்லாஹ் உனக்கு *எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ* அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் *உனக்குத் தீங்கு செய்துவிட* முடியாது.

*எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன”* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)*திர்மிதி: 2440*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *