எந்த நபிமார்களுக்கும் செய்ததை விட இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ் அதிகப் பேரருள் புரிந்துள்ளான் என்பது இவ்வசனத்தின் (11:73) மூலம் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் ஒவ்வொரு தொழுகையிலும் எனக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டிப் பிரார்த்தியுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதற்காக ஒரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்தார்கள். தொழுகையில் இருப்பில் நாம் ஓதும் ஸலவாத் எனும் அந்தப் பிரார்த்தனையில் “இறைவா! இப்ராஹீம் நபிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீ அருள் புரிந்தது போல் முஹம்மதுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அருள் புரிவாயாக!” என்று குறிப்பிட்டிருப்பது இப்ராஹீம் நபியின் மீது அல்லாஹ் செய்த மகத்தான அருளை நமக்குப் புரிய வைக்கிறது.