*அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா?*
பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மாவின் ஆரம்ப உரையை தமிழ்மொழியிலும் இரண்டாவது உரையை அரபியிலும் செய்யும் வழமை இருந்துவருகிறது.
நபியவர்கள் ஜும்ஆவின் இரண்டு உரைகளையும் அரபியில் தான்செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் தாய் பாஷை அரபி. அதனால்தான் அரபியில் உரையாற்றினார்கள். ஜும்ஆ உரை என்பது வந்திருக்கக் கூடியவர்களுக்குரிய ஒரு உபதேசமாகும்.
அந்த உபதேசம் அவர்களின் தாய்மொழியில் தான் அமைய வேண்டும். அப்போதுதான் மிம்பரில் இருப்பவர்என்ன சொல்கிறார் என்பது மக்களுக்குப் புரியும்.
மக்களுக்கு போதனைசெய்வதும், அதன் மூலம் மக்கள் திருந்த வேண்டும் என்பதும் தான் குத்பாவின் அடிப்படை நோக்கம் என்பதை நபிகளாரின் குத்பா பற்றிய செய்தி எமக்கு உணா்த்துவதனை காணலாம்.
‘நபி (ஸல்) அவர்கள் இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவார்கள். இரண்டிற்கும் இடையே (சொற்பொழிவின் போது) அமர்வார்கள்.குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.மக்களுக்கு போதனை செய்வார்கள்.’
(ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி),
நூல்: முஸ்லிம்)
இமாம் சொல்லும் நான்கு விடயங்களை அறிந்து வாழ்வை வழமாக்கவேண்டிய குத்பாக்கள் இந்நோக்கத்தை இன்று நிறைவேற்றுகின்றனவா?இன்று நடைமுறையில் உள்ள இரண்டாம் குத்பாவை அரபியில் ஓதுவதால் இமாம் என்ன சொல்கிறார் என்பதையே அறிய முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகி விடுகிறது. எனவே, இரண்டு குத்பாக்கள் செய்வது தான் நபிவழியேதவிர அரபு மொழியில் தான் உரை நிகழ்த்த வேண்டும் என்பதல்ல.
ஆனால்நம்மவர்கள் இரண்டாவது உரையை அரபியில் செய்வார்கள் முதல் உரையைதமிழில் செய்வார்கள். இரண்டாவது உரை அரபியில் தான் அமையவேண்டும் என்பது இவர்களின் வாதமாகும். இரண்டாம் உரையை அரபியில்தான் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் முதல் உரையையும் அரபியில்செய்ய வேண்டியதுதானே அதை மாத்திரம் ஏன் தமிழில் செய்ய வேண்டும்?