அனைத்து துன்பங்களின் போதும் ஓத வேண்டியவை
அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துஆவை ஓதியுள்ளனர்.
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் அளீம்.
நூல்: புகாரி 6345
அல்லது கீழ்க்காணும் துஆவை ஓதலாம்.
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ
லாயிலாஹ இல்லல்லாஹூல் அளீமுல் ஹலீம் லாயிலாஹ இல்லல்லாஹூ ரப்பு[B]ல் அர்ஷில் அளீம். லாயிலாஹ இல்லாஹூ ரப்பு[B]ஸ் ஸமாவா(த்)தி வரப்பு[B]ல் அர்ளி வரப்பு[B]ல் அர்ஷில் கரீம்.
பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத் தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
நூல்: புகாரி 6346