அந்தரங்கத்தை வெளிப்படுத்தக்கூடாது
கணவன் மனைவிக்கு இடையில் நடக்கும் அந்தரங்கமான விஷயங்களை மற்றவர்களிடத்தில் சொல்வது தவறு. ஆனால் சில பெண்கள் தன் கணவனின் அந்தங்கமான விஷயங்களை மற்ற பெண்களிடத்தில் கூறுகிறார்கள். சில ஆண்களும் இவ்வாறு மற்ற ஆண்களிடத்தில் தன் மனைவியின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். மோசமான இந்தச் செயலை விட்டும் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் தன் மனைவியுடன் இணைகிறான். அவளும் அவனுடன் இணைகிறாள். பிறகு அவளுடைய இரகசியத்தை பரப்பிவிடுகிறான். இவன் தான் மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மோசமான அந்தஸ்த்து உள்ளவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்ள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : முஸ்லிம் (2597)
மற்றப் பெண்களின் அந்தரங்கத்தைப் பற்றி
தன் கணவனிடத்தில் கூறுவதும் தவறு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் இன்னொரு பெண்ணை (வெற்று மேனியோடு) கட்டித் தழுவிட வேண்டாம். பின்னர் அவளைப் பற்றி இவள் தன் கணவனிடம் அவளை அவன் நேரில் பார்ப்பதைப் போன்று வர்ணனை செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5240)