*அதிசய பதிவேடு*

அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்லாமல் மனிதனோடு தொடர்புள்ள பல பொருப்புகளை *வானவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதிலே மனிதர்களை கண்கானித்து நன்மை தீமைகளை பதிவு செய்வதும் ஒன்றாகும்.*

‎‏

*ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.*

*(அல் குர்ஆன் 86 :4)*

*வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.*

*(அல்குர்ஆன் 50:17,18)*

*அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.*

*(அல் குர்ஆன் 43:80)*

*உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.*

*(அல் குர்ஆன் 82 :10-12)*

இவ்வாறு மனிதனின் செயல்கள் உலகில் வாழும்போது ஒன்றுவிடாமல் வானவர்களால் பதியப்படுகின்றது . இப்படி அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் கணக்கெடுத்து இவன் நல்லவனா? கெட்டவனா? என்று இறந்த பின் மீண்டும் ஒரு முறை வானத்திற்கு அவனுடைய ரூஹ் எடுத்துச் செல்லப்பட்டு பதிவாகிறது. இதோ அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் .

இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் என்று இஸ்லாம் நமக்கு சொல்லித் தருகிறது.

*அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.*

*(அல்குர்ஆன் 99:7,8)*

பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக *குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!* எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.

*(அல்குர்ஆன் 18:49)*

*பதிவேட்டைப் பார்த்து அதிர்ந்து போகும் மனிதன், இந்தப் புத்தகம் தனக்குக் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டுமே* என்று கதறுவான். *புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே!* எனக் கூறுவான்.

(அல்குர்ஆன் 69:25-29)

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

0 thoughts on “அதிசய பதிவேடு*”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *