அக்டோபஸ் எனும் கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா?
உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 5:96
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அஹ்மத் 8720
பொதுவாக கடலில் உணவாகக் கிடைக்கும் அனைத்தும் நமக்கு அனுமதிக்கப்படவை தான் என்று மேற்கண்ட வசனமும், நபிமொழியும் கூறுகின்றன.
எனவே அக்டோபஸ் உட்பட அனைத்து கடல்வாழ் உயிரினத்தையும் உண்ணலாம். ஆனால் அது உடலுக்கு உகந்த உணவா? என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். ஏனென்றால் நமக்கு கேடு தருகின்ற பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 2:195