*அகீதா (عقيدة) என்றால் என்ன ?*
*”அகீதா” என்ற அரபுப் சொல்லுக்கு உடன்படிக்கை- வாக்குறுதி போன்ற பொருள்கள் உண்டு. “அக்த்” என்ற அரபுச் செல்லிருந்து பெறப்பட்டதே அகீதா என்ற சொல்லாகும். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை “அகீதா” என்ற பொருளில் இஸ்லாமிய அறிஞர்கள் அழைப்பார்கள்.*
ஒரு கட்டிடத்தின் உறுதியும் பெருமதியும் அதன் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுவது போல இஸ்லாத்தில் இபாதத்துகளும் ஏனைய காரியங்களின் தகுதியும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளில் ஒருவர் கொண்டிருக்கும் (ஈமான்) உறுதியைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
‘அவர்கள் செய்த அமல்களின் பக்கமாக நாம் முன்னோக்கினோம். (அவை பயனற்றதாக இருந்ததால்) அதனை பரத்தப்பட்ட பஞ்சுகளாக மாற்றினோம்”.
(25: 23)
மனிதன் தன்னைப் படைத்த ஏக இறைவனை எப்படியெல்லாம் தனிமைப்படுத்துவதாலும் ஓர்மை படுத்துவதாலும் இறைவனின் உரிமைகள் பாதுகாக்கப்படுமோ அவ்வாறு இறைவனை ஒருமைப்படுத்துவதையே “அகீதா” கோட்பாடு வேண்டி நிற்கிறது. இதையே “தவ்ஹீத்” (ஏகத்துவம்) என்று அழைக்கிறௌம்.
இந்த “தவ்ஹீத்” எனும் ஓரிறைக்கொள்கையை ஏற்று ஈமான் கொண்டு வாழ்பவர்களையே முஸ்லிம்கள் என்று இஸ்லாம் அழைக்கிறது.
ஏகத்துவம்