ஹரமில் தொழுவதன் சிறப்பு என்ன?

இலட்சம் மடங்கு சிறந்தது.

(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்­ஜிதுல் ஹராமில் தொழு­வது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்­ளியில் (மஸ்­ஜி­துன்ந­பவியில்) தொழு­வது 1000 மடங்­காகும். பைதுல் மக்­திஸில் தொழு­வது 500 மடங்கு சிறந்தது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர்( ரலி) நூல்: ஸகீர் பைஹகீ)

مسند البزار = البحر الزخار (10/ 77)
4142- حَدَّثنا إبراهيم بن حُمَيد، قَال: حَدَّثنا مُحَمد بن يزيد بن شداد، قَال: حَدَّثنا سَعِيد بن سالم القداح، قَال: حَدَّثنا سَعِيد بْنُ بَشِيرٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ عُبَيد اللَّهِ، عَن أُمِّ الدَّرْدَاءِ، عَن أَبِي الدَّرْدَاءِ، رَضِي اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: فَضْلُ الصَّلاةِ فِي المسجد الحرام على غيره مِئَة أَلْفِ صَلاةٍ وَفِي مَسْجِدِي أَلْفُ صَلاةٍ وَفِي مسجد بيت المقدس خمسمِئَة صَلاةٍ.

السنن الصغير للبيهقي {ط العلمية} (1/ 456)
1821- وَرُوِّينَا فِي حَدِيثِ أَبِي الدَّرْدَاءِ وَجَابِرٍ مَرْفُوعًا : فَضْلُ الصَّلاَةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى غَيْرِهِ مِئَةُ أَلْفِ صَلاَةٍ ، وَفِي مَسْجِدِي هَذَا أَلْفُ صَلاَةٍ وَفِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِئَةِ صَلاَةٍ.

மதீனாவின் மஸ்ஜிதுந் நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்தது.

صحيح البخاري (2/ 60)
1190 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ رَبَاحٍ، وَعُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَلاَةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلاَةٍ فِيمَا سِوَاهُ، إِلَّا المَسْجِدَ الحَرَامَ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல் : புகாரி 1190 .

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed