ஸ்கலிதம் ஏற்பட்டால் குளிப்பு கடமை

    கனவு காண்பதன் மூலம் உறக்கத்தில் விந்து வெளிப்படுவதற்கு ஸ்கலிதம் வெளிப்படுதல் என்று சொல்வார்கள். இது ஆண்களுக்கு அதிகம் ஏற்படும். அரிதாக பெண்களுக்கும் ஏற்படும். இது வெளிப்பட்டால் குளிப்பது கடமையாகிவிடும்

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)

நூல் : முஸ்லிம் (521)

மாதவிடாய் ஏற்பட்டால் குளிக்க வேண்டும்

மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குüத்துவிட்டு  தொழுதுகொள்!” என்றார்கள்.’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (228)

பிரசவத்தீட்டு ஏற்பட்டால் குளிக்க வேண்டும்

பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் போது அசுத்தம் வெளிப்படும். இதற்கு பிரசவத் தீட்டு என்று தமிழில் சொல்வார்கள். அரபியில் நிஃபாஸ் என்று சொல்வார்கள். இது ஏற்பட்ட பெண்கள் குளித்து தூய்மையடைய வேண்டும். 

துல்கஃதா மாதத்தில் எஞ்சிய ஐந்து நாட்கள் இருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் செய்வதற்காக) புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம்.

துல்ஹலைஃபா என்ற இடத்தை வந்தடைந்த போது உமைஸடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அபூபக்ரின் மகன் முஹம்மத் என்பாரை பெற்றெடுத்தார். நான் என்ன செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுவருமாறு அஸ்மா (ரலி) தூது அனுப்பினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ குளித்துக்கொண்டு மறைவிடத்தில் துணியை கட்டிக்கொள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் ; ஜாபிர் (ரலி)

நூல் : நஸயீ (289)

    குழந்தையை பெற்றெடுத்த உடனே குளித்துக்கொள்ள முடியாவிட்டால் தன்னால் எப்போது இயலுமோ அப்போது குளித்து தூய்மையாகிக்கொள்ள வேண்டும். அதுவரைக்கும் மாதவிடாய் ஏற்பட்டப் பெண்களைப் போன்றே தொழுகையும் நோன்பையும் விட்டுவிட வேண்டும். தூய்மையானப் பிறகு விடுபட்ட நோன்பை மாத்திரம் திரும்ப வைத்தால் போதும்

உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையாகும்

உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையாகிவிடும். விந்து வெளிப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆண்குறியும் பெண்குறியும் சந்தித்துவிட்டாலே இருவரும் குளிப்பது கடமை. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குüயல் கடமையாகிவிடுகிறது. (விந்து வெளியாகா விட்டாலும் சரியே!)

அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)

நூல் : புகாரி (291)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தம் மனைவியின் (இரு கைகள், இரு கால்கள் ஆகிய) நான்கு கிளைகளுக்கிடையே அமர்ந்து (ஆண்)குறி (பெண்)குறியைத் தொட்டு (சந்தித்து)விட்டாலே (இருவர்மீதும்) குளியல் கடமையாகிவிடும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (291)

குளிப்புக்கடமையானவர்கள் தொழக்கூடாது

குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள்.

அல்குர்ஆன் (4 : 43)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed