ஷைத்தான் இருக்கிறான் என நம்புதல்

 

இப்லீஸ். நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன் – 7:12, 18:50

 

இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான் – 2:34, 15:31, 17:61, 20:116, 38:74

 

மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான் -7:14-17, 15:36-,39, 17:62-64

 

உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது – 16:99, 14:22, 15:42, 17:65

 

இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான் – 18:50

 

இறைத் தூதர்கள் தவிர மற்ற மனிதர்களுக்கு அவன் தென்பட மாட்டான் – 7:27

 

மனித உள்ளங்களில் ஊடுறுவி தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பான் – 4:119, 4:120, 5:91, 7:20, 20:120, 114:4

 

கெட்ட மனிதர்கள் நரகத்திற்குச் செல்வது போல் இவனும் நரகத்திற்குச் செல்வான் – 14:22, 26:94,95, 59:15

 

தீய எண்ணங்களுக்கு ஆட்படுவோர் உடனே அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடுவது கடமையாகும் – 7:200, 16:98, 23:97,98, 40:56, 41:36, 113:4, 114:3

 

ஷைத்தான்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முடியாது – 15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9

 

ஜின்கள் இருக்கிறார்கள் என நம்புதல்

 

ஜின்களிலும் தூதர்கள் அனுப்பப்பட்டனர் – 6:130

 

கெட்ட ஜின்கள் நரகத்தை அடைவார்கள் – 6:128, 7:38, 7:179, 11:119, 41:25, 41:29, 46:18, 55:39

 

மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன – 17:88, 51:56, 55:33

 

ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் என்பவனும் ஜின் இனத்தவன் தான் – 18:50

 

ஸுலைமான் நபிக்கு ஜின்களைக் கட்டுப்படுத்திக் கொடுத்து இறைவன் சிறப்பித்திருந்தான் – 21:82, 27:17, 27:39, 34:12, 38:37,38

 

ஜின்கள் மனிதனை விட ஆற்றல் மிக்கவை – 27:39,40, 72:8,9

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டனர் – 46:29-32, 72:1-4, 72:19

 

ஜின்களிலும் மறுமையை நம்பாதவர்கள் உள்ளனர் – 72:7

 

ஜின்கள் வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்க முயலும்போது தடுக்கப்படுவார்கள் – 15:17,18, 26:212, 37:7-10, 67:5, 72:8,9

 

ஜின்களில் நல்லோரும், தீயோரும் உள்ளனர் – 72:11-14

 

ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டனர் – 7:12, 15:27, 38:76, 55:15

 

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்கள் எதிரிகளாக இருந்தது போல தீய ஜின்களும் எதிரிகளாக இருந்தனர் – 6:112

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed