வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
அந்தப் பணிகள் அல்லாமல் தீயவர்களை இறைவன் அழிக்க நாடும்போது அதற்காகவும் வானவர்களை அனுப்புவான். அவர்கள் இறைவனின் கட்டளைப்படி அழிப்பார்கள். இதைத்தான் இவ்வசனங்கள் (2:210, 6:8, 6:158, 15:8, 16:33) கூறுகின்றன.