வஹீயை மேற்கோல் காட்டாத இமாம்களின் மார்க்க சட்டங்களை ஏற்கலாமா

ஒரு முஸ்லிம் வஹி என்னும் இறைச்செய்தியை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று அல்லாஹ் உத்தரவிடுகின்றான்.

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள் (7:3)

இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கம் என்பதின் உண்மையான பொருள் மார்க்கம் என்று யார் எதைக் கூறினாலும் அது அல்லாஹ் கூறியதாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறாத எதுவும் இஸ்லாம் மார்க்கமாகக் கருதப்பட மாட்டாது. ஒன்ரைச் சட்டமாக்கும் அதிகாரம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது.

அதிகாரம் அல்லாஹ்வைத்தவிர யாருக்கும் இல்லை (12:40)

அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான இந்த மார்க்கத்தில் இறைத்தூதர்களும் கூட தமது சுய விருப்பப்படி எதையும் சட்டமாக்கிட முடியாது.

(முஹம்மதே!) உமது இறைவனின் வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக (18:27)

மேலும் அல்லாஹ் ரசூல் (ஸல்) அவர்களைப்பார்த்து கூறுகின்றான். அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் இது அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது இதை மாற்றியமைப்பீராக!” என நமது சந்திப்பை நம்பாதோர் கூறுகின்றனர்.

நானாக இதை மாற்றியமைத்திட எனக்கு அதிகாரம் இல்லை. எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றுவதில்லை. என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்” என (முஹம்மதே!) கூறுவீராக. (10:15)

மேலும் மார்க்க சட்டங்கள் வஹி கிடைக்காத போது ரசூல் (ஸல்) அவர்களுக்குக்கூட தெரியவில்லை. இதற்கு இன்னும் சில ஹதீஸ்கலைப் பார்ப்போம்.

ரசூல் (ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்று அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. அதை அவர் பெற்றுக்கொண்டார்கள் சிறிது நேரத்துக்கு பின் பட்டாடையை உமர் (ரலி) அவர்களிடம் நீட்டி இதை நீ வைத்துக்கொள் இது எனக்கு ஹராம் என்று இப்பொழுதுதான் ஜிப்ரீல் (அலை) வந்து சொல்லிவிட்டுப்போனார்

இன்னொரு சந்தர்ப்பத்தில் “ரசூல் (ஸல்) பாதையில் செல்வதைக் கண்ட யூதர்கள் அவரிடம் சென்று உயிர் என்றால் என்ன என்று கேட்போம் என்று அலோசித்ததோடு போய் கேட்கின்றனர். ரசூல் (ஸல்) அவர்களுக்கு பதில் தெரியவில்லை திகைத்து நிற்கின்றனர்.

பின் வஹி மூலம் அல்லாஹ் அறிவிக்கிறான் “நபியே உம்மிடம் உயிர் என்றால் என்ன என்று கேட்கின்றனர் கூறுவீராக அது அல்லாஹ்வின் கட்டளை“.

இன்னொரு சந்தர்ப்பத்தில் “ஒருவர் ரசூல் ஸல் அவர்களிடம் வந்து நான் சஹீத் ஆக மரணித்துவிட்டால் என்னுடைய எல்லப்பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுமா? என்று வினவ ‘ஆம்‘ என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின் சிறிது நேரம் கழித்து! உங்களில் யார் என்னிடம் கேள்விகேட்டது அவர் எங்கே?

அவர் நான் இதைத்தான் கேட்டேன் என்று சொல்ல பின் தூதரவர்கள் சொன்னார்கள். உன்னுடைய எல்லாப்பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத் தவிர” எனக்கு இப்போதுதான் வஹி மூலம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பதுருப்போர் சந்தர்ப்பத்தில் ரசூல் (ஸல்) சுய முடிவு எடுத்தபோதிலும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற கண்தெரியாத சஹாபி நபியவர்கள் சபைக்கு வந்ததற்காக முகம் சுளித்த நேரத்திலும், தேன் தனக்கு ஹராம் என்று சொன்ன போதும் அல்லாஹ் கண்டித்துள்ளான். இதிலிருந்து நபியவர்கள் நமக்கு போதித்த அனைத்தும் இறைச்செய்திகள் தான். அதாவது ஹதீஸ்களை நபியவர்கள் தமது சுய விருப்பப்படி கூறவில்லை என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.

அத்தோடு அல்லாஹ் தூதருக்கு கட்டளையிடுகின்றான்.”உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர். இது உமக்கும், உமது சமுதாயத்துக்கும் அறிவுரை. பின்னர் விசாரிக்கப்படுவீர்கள்.” (43-43,44)

அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக! அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்! அல்லாஹ் உமக்கு அருளியதில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைக் குழப்புவார்கள் என்பதில் கவனமாக இருப்பீராக! அவர்கள் புறக்கணித்தால் அவர்களின் சில பாவங்கள் காரணமாக அவர்களைத் தண்டிப்பதையே அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மனிதர்களில் அதிகமானோர் குற்றம் புரிவோராகவுள்ளனர்“. (5:49)

அல்லாஹ் அருளியவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். வேறு சஹாபாக்கள், மத்ஹப் இமாம்களாக இருந்தாலும், வேறு யாருடைய கருத்தாக இருந்தாலும் அவற்றை மார்க்கமாகக் கருதி பின்பற்றக்கூடாது என்பதற்கு போதுமான ஆதாரமாகும்.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *