*வழித்தவறும் பெண்களும் & பொறுப்பற்ற பெற்றோர்களும்…*

\\*பெற்றோரின் பொறுப்பு*\\

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்….

………..*ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள்*. ….(முஸ்லிம் 3733)

\\*இறையச்சம் தான் அடிப்படை..*\\

*திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது.* [2:197]

*நீங்கள் இறையச்சமுடையோராக ஆகிட உங்களுக்கு நாம் வழங்கிய (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அதில் உள்ளதைச் சிந்தியுங்கள்!* [2:63]

\\*முஸ்லிமல்லாதவர்களை மணக்கத்தடை*\\

*இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்!* இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். *இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்*! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். [2:221]

\\*வழித்தவறுவதற்கான காரணிகளை கண்டறிந்து அவற்றை களைவோம்.*\\

வளர்ப்பில் குறைபாடு.

*மார்க்கப் பற்றோடு வளர்க்காதத்தின் காரணமாக இம்மார்க்கத்தை துச்சமாக நினைத்து வெளியேறுகிறார்கள்.*

*அதிக செல்லம் கொடுத்து வளர்த்தல்*.

*விலை உயர்ந்த செல்போன்களை வாங்கி கொடுத்து சமூகவளையத்தளங்களில் உலவவிட்டு கண்கானிக்கத்தவறுவது*

*வெகுதூர கல்லூரிகளுக்கு படிக்க அனுப்புவது.*

*திருமண வயதை அடைந்தும் மகளின் திருமணத்தை தாமதிப்பது.*

*மகளின் நட்புகளை கண்காணிக்காத தவறுவது.*

பொறுப்பின்மை. *எங்கெல்லாம் என் பிள்ளை அப்படி செய்யாது என கண்மூடித்தனமாக நம்பும் பெற்றவர்கள்* இருக்கிறார்களோ அங்குதான் அதிகமாக நடக்கிறது.

*காதல், மோகங்களை உயர்த்திப் பிடிக்கும் சினிமா டிவி, போன்றவற்றில் மூழ்கியிருப்பது*. இன்னும் ஏராளம்

இப்படி ஓடிப்போய் நடக்கும் திருமணங்களில் 90% தோல்வியடைந்து பெண்களின் வாழ்க்கை *இம்மையிலும் மறுமையிலும் நாசமாகிறது*. இன்னும் குடிகாரன்களிடமும், மதவெறிப் பிடித்தவர்களிடமும் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை பரிபோகிறது.

எனவே நம் இஸ்லாமிய சகோதரிகள் வழித்தவறும் பாதைகளை அடைத்து நல்லறங்கள் புரிவதற்குத் தேவையான இறையச்சத்தை ஊட்டி வளர்த்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைய *அல்லாஹ் அருள் புரிவானாக*

————————-

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *