வரதட்சனை மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன?

 

1) இஸ்லாம் கூறும் பொருளியல் பாகம்-14 ல், திருக்குர்ஆன் சூரா 4:140 வசனம் குறிப்பிட்டு அல்லாஹ்வை கேலி செய்யும் சபையில் நீங்கள் அமராதீர்கள்.அதாவது பித்-அத் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்வது தவறு.ஆனால் அதில் தரும் சாப்பாட்டை நம் வீட்டிற்க்கு அனுப்பி நாம் சாப்பிடுவது ஹராம் இல்லை என்று கூறி உள்ளீர்கள .

2) மெளலீது, ஹத்தம், ஃபாத்திஹா ஓதுவது ஹராம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ?

ஆனால் அதில் தரும் சீரனி, சாப்பாடு ஹராம் என்று கூறுகிறீர்கள்.

இதிலும் அல்லாஹ்வுடைய வசனம் கேலிதானே! செய்யப்படுகிறது.அப்படி என்றால் இதை ஓதி நம் வீட்டிற்க்கு சாப்பாடு அனுப்பினால் நாம் சாப்பிடலாம் தானே! இதற்க்கு உங்களின் விளக்கத்தை கூறி எனக்கு புரிய வைக்கவும் .

 

மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்.

இத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. அந்த விருந்தில் நாம் கலந்துகொள்வதே அதை நாம் ஆதரிக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

அதே நேரத்தில் இத்திருமண விருந்துக்கு நம்மை அழைத்து நாம் போகாவிட்டால் இதை நாம் புறக்கணித்து இருக்கின்றோம் என்பதை திருமணம் நடத்தியவர்கள் கூட விளங்கிக்கொள்கிறார்கள். இந்த அடிப்படையில் தான் திருமண விருந்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று கூறுகிறோம்.

அத்திருமணத்தில் தரப்படும் உணவு ஹராம் என்று நாம் கூறவில்லை. உணவே பரிமாராமல் மார்க்கத்திற்கு மாற்றமான திருமணம் நடந்தால் அப்போதும் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றே கூறுவோம். ஏனென்றால் இவ்வாறு நாம் கூறுவதற்கு உணவு காரணமல்ல. மார்க்கத்திற்கு மாற்றமான திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது என்பதே காரணம்.

வரதட்சணை, பித்அத்துகள், ஷிர்க்கான பாடல்கள் போன்றவை திருமணங்களில் இடம் பெறுவதால் அந்தப் பாவத்திற்குத் துணை போய் விடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தத் திருமணங்களையும், அதையொட்டி நடைபெறும் விருந்துகளையும் புறக்கணிக்கின்றோம். இது போன்ற திருமண விருந்துகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அந்த உணவு ஹராம் என்பதற்காக அல்ல!

திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கு நாம் கூறிய இந்த காரணம் நமது வீட்டில் இருந்துகொண்டு அந்த உணவை உண்ணும் போது ஏற்படாது. அதாவது இந்த உணவை நமது வீட்டில் இருந்துகொண்டு உண்பதால் அத்திருமணத்தை ஆதரிக்கும் நிலை ஏற்படவில்லை. இந்த உணவை உண்பது மார்க்கத்தில் எந்த அடிப்படையிலும் தவறில்லை என்பதால் இதை உண்ணுகிறோம்.

நமது வீட்டிற்கு உணவுகளைக் கொடுத்து விட்டால் அதைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. ஏனெனில் நமது வீட்டிற்குக் கொடுத்து விடப்படும் உணவு அன்பளிப்பு என்ற நிலையை அடைந்து விடுகின்றது.

பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப் பட்ட இறைச்சி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ”இது பரீராவுக்குத் தர்மமாகும். ஆனால் நமக்கு இது அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1495

தர்மப் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் சாப்பிடுவது தடையாக இருந்தாலும், தர்மத்தைப் பெற்றவர் அதை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய போது அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனவே அன்பளிப்பு என்ற அடிப்படையில் வீட்டிற்கு வரும் உணவுகளைப் பெற்றுக் கொள்வதில் தவறில்லை.

மவ்லூது ஹத்தம் ஃபாத்திஹா ஆகிய அநாச்சாரங்கள் அரேங்கற்றப்பட்டு தரப்படும் உணவு நம் வீட்டிற்கு வந்தாலும் அதை நாம் உண்ணக்கூடாது. மார்க்கத்திற்கு மாற்றமான சபையை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதை உண்ணக்கூடாது என்று நாம் கூறவில்லை.

மாறாக இவ்வாறு தரப்படும் உணவில் புனிதம் இருப்பதாகவும் மற்ற உணவைக் காட்டிலும் இந்த உணவுகளுக்கு தனிச்சிறப்பு இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

மவ்­லிது, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்லிது ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். மவ்லூது ஓதுபவர்கள் முழு உணவையும் எடுத்து வைத்து மவ்­து ஓதாவிட்டாலும் அதை நேர்ச்சையாக எண்ணியே தயாரிப்பதால் அதைச் சாப்பிடக் கூடாது.

ஒரு உணவில் இப்படிப்பட்ட தவறான நம்பிக்கை வைக்கப்படுமானால் அதை உண்பது தடுக்கப்பட்டுவிடுகின்றது. மீறி இந்த உணவை உண்டால் இதில் புனிதம் இருப்பதாக மூடர்கள் நினைப்பதை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

இந்த உணவு உங்களுக்கு மட்டுமல்ல வேறு யாருக்கும் ஆகுமானதல்ல. இந்த உணவு பூஜை செய்யப்பட்ட பொருட்களின் அந்தஸ்த்தை எட்டிவிடுகின்றது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வ­யச் செல்லாமலும் நிர்பந்திக்கப் படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:173

இந்த வசனத்தில் ‘அறுக்கப் பட்டவை’ என்று நாம் மொழி பெயர்த்துள்ள இடத்தில் அரபு மூலத்தில் ‘உஹில்ல’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். அதாவது அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்ட பொருட்களை உண்ணக் கூடாது என்பதையும் சேர்த்தே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த அடிப்படையில் சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள் மட்டுமின்றி, முஸ்­ம்கள் என்ற பெயரில் அவ்­யாக்களுக்காகப் படைக்கப்பட்ட உணவுகளையும் புனிதம் இருப்பதாக கருதப்படும் உணவுகளையும் உண்ணக் கூடாது என்று கூறி வருகிறோம்.

வரதட்சனை திருமணத்தில் தரப்படும் உணவு பூஜிக்கப்படுவதில்லை. அதில் புனிதம் இருப்பதாக யாரும் நம்பிக்கை வைக்கவுமில்லை. மற்ற உணவுகளைப் போன்று அதுவும் சாதாரண உணவு என்ற நம்பிக்கையில் அது பரிமாறப்படுவதால் அதை உண்ணலாம் என்று கூறுகிறோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed