வரதட்சணை திருமணத்தில் போய் சாப்பிடலாமா?

தவறான முறையில் ஒருவர் சம்பாதிக்கின்றார். அவர் தவறான முறையில் சம்பாதித்தாலும் அதை நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராம் இல்லை. ஏனென்றால் அவருடைய வருமானம் தான் ஹராமாகும். அவர் நமக்கு கொடுக்கக்கூடிய அன்பளிப்பு ஹராம் ஆகாது.

அப்படியென்றால் வரதட்சணை திருமணத்திற்குச் சென்று சாப்பிடலாமா?

புறக்கணிப்பதற்கான காரணங்கள்

வரதட்சணை திருமணத்தில் போடப்படும் உணவு ஹராம் என்று நாம் ஒருபோதும்கூறவில்லை. எனினும் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகின்றோம். சபை சரியில்லாத காரணத்தாலும், அல்லாஹ்வின் வார்த்தையும், அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் வார்த்தையும் அங்கே காலில் போட்டு மிதிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். சபை சரியில்லாத காரணத்தால் நபி (ஸல்) அவர்களும் விருந்தைப் புறக்க”த்துள்ளார்கள். இதற்கு, பின்வரும் செய்தி ஒரு வலுவான ஆதாரம் ஆகும்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கüன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால்அவர்கüடம் செல்லவில்லை. (திரும்பிப் போய் விட்டார்கள்.) (இதற்கிடையில் அங்கே) அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ(ரலி) அவர்கüடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்கüடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாச-ல் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால் தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள்ஃபாத்திமா (ரலி) அவர்கüடம் சென்றுநபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள்.  அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள்தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும். (அதன்படியே நான் நடந்து கொள்கிறேன்)” என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர்களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.

(நூல்: புகாரி 2613)

இந்த ஹதீஸின் மூலம் சபை சரியில்லாத இடத்தைப் புறக்கணிக்கலாம் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டுகேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.  (அல்குர்ஆன் 4:140)

வரதட்சணை திருமண விருந்துகளில் கலந்து கொண்டால் அதை மறைமுகமாக ஆதரிப்பவராக நாம் ஆகி விடுவோம். இதன் காரணத்தால் தான் நாம் அது போன்ற சபைகளைப் புறக்கணிக்கின்றோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *