*வட்டி- الرِّبَا- usury*

——————————-

*அல்லாஹுவுடன் போர் பிரகடனம்..*

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!

அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் *அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!* நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

(அல்குர்ஆன்:2:278,279.)

———————————————

*வட்டிக்கு வாங்குபவருக்கும் தண்டனை…*

*வட்டி உண்பவன் மறுமையில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் எழுப்பப்படுவான்*. (2:275)

*வட்டி உண்பது பெரும்பாவங்களில் ஒன்று* (புகாரி: 2766.)

*வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.*

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); *முஸ்லிம்-3258 (4177)*

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், *வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும்* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

நூல் : *புகாரி-2086 , 5347, 5945*

———————————————

*மறுமையில் கிடைக்கும் தண்டனை..*

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன்.* அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். *ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார்.* ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார்.

*ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது*.

அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் *கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார்*.

அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்! ‘*அவர் யார்?’* என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘*ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!’* எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

, *புகாரி-2085*

———————————————

*வட்டியை விட்டு முழுமையாக விடுவித்து கொள்வோம்…*

*வர வேண்டிய வட்டியை விடுபவரே முஃமினாவார்.*

நம்பிக்கை கொண்டோரே ! அல்லாஹ்வை அஞ்சுங்கள் *நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்*. ( 2:278)

இப்படிப்பட்ட வட்டி என்ற பெரும் பாவத்திலிருந்து *அல்லாஹ் நம் அனைவர்களையும் காப்பாற்றுவானாக!*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed