*லவ் பேர்ட்ஸ் , கிளி & புறா போன்ற பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்கலாமா❓*

*அதற்க்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளதா❓*

   வீட்டில் செல்ல பிராணிகளாக பறவைகளையும் வளர்ப்பதற்கு எந்த வித தடையும் இல்லை. அதே சமயத்தில் சில ஒழுங்குகளை கடைப்பிடித்தல் மிக முக்கியம்.

உதாரணமாக…

அதன் சுதந்திரத்தில் எந்த தலையீடுதலும் இருத்தல் கூடாது.

அந்த பறவைகளை எந்த வித துன்புறுத்தலும் செய்யாமலும்…

*சிறகுகளை வெட்டாமலும்*.

*பறப்பதற்கு போதிய இடம் கொடுக்காமல் மிக சிறிய கூண்டில் அடைப்பது போன்ற செயல்கள் செய்யக் கூடாது*. இதற்கு குற்றம் பிடிக்க படுவோம்.

எனவே *பறப்பதற்கு போதிய இடம் அளித்து*, சரியான முறையில் உணவளித்து, அதை நன்றாக கவனித்து, அதற்கு தக்க துணைகளை ஏற்படுத்தி..

அது துன்பப்படாத வகையில் வளர்த்தால் எந்த வித தடையும் கிடையாது. தாராளமாக வளர்க்கலாம்.

//*ஆதாரங்கள்//*

*உயிர்ப் பிராணிகள் வதைக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்*.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 5513

*உயிரினங்களின் முகத்தில் வடு ஏற்படுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர்.*

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 2953

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ‘அபூ உமைர்’ என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள் (எம் விட்டிற்கு வந்தால்), *அபூ உமைரே! பகுதி உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?* என்று கேட்பார்கள். *அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்*. (ஹதீஸின் சிறு பகுதி)

நூல்: *புகாரி: 6203.*

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். *அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள்*.

அதன் காரணத்தால் *அவள் நரகத்தில் புகுந்தாள்*. அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் *நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை* என்று அல்லாஹ் கூறினான்.  என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 2365

———————

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed