ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 1

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.

ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 789

ரப்பனா வல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 732

அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து

நூல்: புகாரீ 796

அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து

(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)

நூல்: புகாரீ 7346

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால்,

சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது

என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்பபூமி நிரம்பஅவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி); நூல்: முஸ்லிம் (819)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 3

நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து  நிமிர்ந்ததும்),

அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்துமில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளிவ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்மதஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்மதஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்ஹத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸஹி

என்று பிரார்த்திப்பார்கள்.

(பொருள்: இறைவா! வானங்கள் நிரம்பபூமி நிரம்பஅவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவாபனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவாஅழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி); நூல்: முஸ்லிம் (821)

ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போது ஓதும் துஆ – 4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும்,

ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல்அர்ளிவ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். அஹக்கு மா காலல் அப்துவ குல்லுனா ல(க்)க அப்துன். அல்லாஹும்மலா மானிஅ லிமா அஃதைத்தவலா முஃத்திய லிமா மனஃத்தவலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்

என்று கூறுவார்கள்.

(பொருள்: எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்பும் அளவுக்குநீ நாடும் இன்ன பிற பொருள்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது, “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது‘ என்பதேயாகும்.)

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி); நூல்: முஸ்லிம் (822)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed