யூனுஸ்
அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது – 10:98, 37:148
இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான் – 21:87,88
தான் தப்புச் செய்து விட்டதாக வருந்தி மன்னிப்புக் கேட்டதால் அவரை அல்லாஹ் மன்னித்தான் – 21:87,88
இவர் கடலில் தள்ளப்பட்டு பின்னர் திமிங்கலம் அவரை விழுங்கியது – 37:140,141,142
இவர் பாவமன்னிப்புக் கேட்டு இறைவனைத் துதிக்காமல் இருந்திருந்தால் நியாயத் தீர்ப்பு நாள் வரை மீன் வயிற்றிலேயே வைக்கப்பட்டிருப்பார் – 37:143,144
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு அனுப்பப்பட்டார் – 37:147
அனைத்து நபிமார்களும் சென்ற வழியில் நடக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்ட இறைவன் இவரைப் போல் நடக்கக் கூடாது என்று கட்டளையிடுகிறான் – 6:90, 68:48,
இவரை மன்னித்து பழைய நிலைக்கு அல்லாஹ் உயர்த்தினான் – 6:86, 68:49-50