முஆவியா (ரலி) அவர்களின் சிறப்பு

التاريخ الكبير 1405 قال لي بن أزهر يعني أبا الأزهر نا مروان بن محمد الدمشقي نا سعيد نا ربيعة بن يزيد سمعت عبد الرحمن بن أبي عميرة المزني يقول سمعت النبي صلى الله عليه و سلم يقول في معاوية بن أبي سفيان اللهم اجعله هاديا مهديا واهده واهد به 

யா அல்லாஹ் முஅவியாவை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழி பெற்றவராகவும் ஆக்குவாயாக. அவருக்கு நேர் வழி காட்டுவாயக. அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழிகாட்டுவாயாக.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ உமைரா

ஆதாரம் : அத்தாரீஹுல் கபீர் 1405 

முஆவியா (ரழி) அவர்களுக்கு நேர்வழி காட்டச் சொல்லியும், அவர் மூலம் (மக்களுக்கு) நேர்வழி காட்டச் சொல்லியும் நபியவர்கள் அல்லாஹ்விடம் பிரார்தித்திருக்கின்றார்கள் என்றால் நபியவர்களின் இந்த துஅவை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருப்பான். எனவே அவர் மூலம் பலர் நேர்வழி பெற்றிருப்பர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. ஆகவே மக்களுக்கு நேர்வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாக முஆவியா (ரழி) அவர்கள் இருந்துள்ளார்கள். அவரின் சிறப்பைத் தெரிந்து கொள்ள இதுவொன்றே போதுமெனலாம்.

முஆவியா (ரழி) அவர்களின் சிறப்பை எடுத்துச் சொல்கின்ற மற்றொரு செய்தியாகக் கீழ்வரும் ஹதீஸ் அமைகின்றது.

صحيح مسلم 6565 – حَدَّثَنَا عِكْرِمَةُ حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ حَدَّثَنِى ابْنُ عَبَّاسٍ قَالَ كَانَ الْمُسْلِمُونَ لاَ يَنْظُرُونَ إِلَى أَبِى سُفْيَانَ وَلاَ يُقَاعِدُونَهُ فَقَالَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- يَا نَبِىَّ اللَّهِ ثَلاَثٌ أَعْطِنِيهِنَّ قَالَ « نَعَمْ ». قَالَ عِنْدِى أَحْسَنُ الْعَرَبِ وَأَجْمَلُهُ أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِى سُفْيَانَ أُزَوِّجُكَهَا قَالَ « نَعَمْ ». قَالَ وَمُعَاوِيَةُ تَجْعَلُهُ كَاتِبًا بَيْنَ يَدَيْكَ. قَالَ « نَعَمْ ». قَالَ وَتُؤَمِّرُنِى حَتَّى أُقَاتِلَ الْكُفَّارَ كَمَا كُنْتُ أُقَاتِلُ الْمُسْلِمِينَ. قَالَ « نَعَمْ ».

முஸ்லிம்கள் அபூஸுப்யானைப் பார்க்காமலும், அவருடன் சேர்ந்து அமராமலும் இருந்தனர். அப்போது அபூஸுப்யான் நபியவர்களிடம் ‘அல்லாஹ்வின் நபியே மூன்று விடயங்களை எனக்குத் தருவீர்களா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். ‘என்னிடமுள்ள அரபுகளில் மிகச்சிறந்த, மிக அழகான  உம்மு ஹபீபா பின்த் அபீஸுப்யானை உங்களுக்கு மணமுடித்துத் தருகின்றேன்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். ‘(எனது மகன்) முஅவியாவை உங்களுடைய எழுத்தாளராக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள். ‘ முஸ்லிம்களுடன் நான் போரிட்டதைப் போல காபிர்களோடும் போராட என்னைத் தலைவராக்குங்கள்’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘ஆம்’ என்று பதில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு அப்பாஸ் (ரழி)

ஆதாரம் : முஸ்லிம் 6565

குறைஷிகளை வழி நடாத்திய அபூஸுப்யானின் மகன் என்பதால் எழுத்தாற்றல், பேச்சாற்றல், நிருவாகத்திறமை போன்ற சிறந்த தேர்ச்சிகளை முஆவியா (ரழி) அவர்கள் பெற்றிருந்தார்கள். இத்தகைய  விவேகமான ஒருவரைத்தான் அதியுயர் நம்பிக்கை, நாணயத்திற்குரிய பணியான ‘வஹீயை எழுதும் பணிக்கு’ நபியவர்கள் அமர்த்தியுள்ளார்கள். நபியவர்களுக்கருகிலிருந்து வஹீயை எழுதியவரென்பதால் அதிகமான ஹதீஸ்களை நபியவர்களிடமிருந்து அவர் கேட்டிருக்க வாய்ப்பிருக்கின்றது. அவருக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்று, காலம் முழுவதையும் நபியவர்களோடு கழித்த அபூஹுரைரா (ரழி) போன்றோரைக் கூட நபியவர்கள் வஹீ எழுத அமர்த்தவில்லை. எனவே முஆவியா (ரழி) அவர்கள் எல்லா வகையிலும் சிறந்தவராகவும், தகுந்தவராகவும் இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்கள்

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்களைக் கவனிப்போமானால் மார்க்க விடயங்களில் அவருக்கிருந்த பேணுதலையும், கூர்மையான அவருடைய அவதானிப்பையும் அறிந்து கொள்ள முடிவதுடன் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து என்பவற்றுக்கப்பால் ஒர் அற்ப விடயமாயினும் அதையும் சுட்டிக்காட்டும் துணிவு, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பணிவு போன்ற அதியுயர் பண்புகளையும் காணமுடியும்.

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்கள்

முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்களைக் கவனிப்போமானால் மார்க்க விடயங்களில் அவருக்கிருந்த பேணுதலையும், கூர்மையான அவருடைய அவதானிப்பையும் அறிந்து கொள்ள முடிவதுடன் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து என்பவற்றுக்கப்பால் ஒர் அற்ப விடயமாயினும் அதையும் சுட்டிக்காட்டும் துணிவு, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பணிவு போன்ற அதியுயர் பண்புகளையும் காணமுடியும்.

صحيح مسلم 5700 – عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِى سُفْيَانَ عَامَ حَجَّ وَهُوَ عَلَى الْمِنْبَرِ وَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ كَانَتْ فِى يَدِ حَرَسِىٍّ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ « إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَ هَذِهِ نِسَاؤُهُمْ ».

ஒரு முறை ஹஜ் காலம் ஒன்றின் போது முஆவியா (ரழி) அவர்கள் (மதீனாவுக்கு வந்து வந்து) மிம்பரில் ஏறி (மதீனாhவின் அமீருடைய) மகனின் கையிலிருந்த சில முடிகளைத் தனது கையில் எடுத்தவராக ‘மதீனா வாசிகளே உங்கள் அறிஞர்கள் எங்கே! ‘பனூஇஸ்ரவேலர்கள் அழிந்தது இதை அவர்களின் பெண்கள் எடுத்த போதுதான்’ என்று கூறியவர்களாக நபியவர்கள் இதை தடைசெய்வதை நான் கேட்டுள்ளேன். என்று கூறினார்கள்.


அறிவிப்பவர்: ஹுமைதிப்னு அப்திர்ரஹ்மான்
ஆதாரம் : முஸ்லிம் 5700

ஒட்டு முடி வைப்பதென்பது இன்றைக்கு சர்வசாதாரணமான ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. அதனால்தான் ஒட்டு முடி வைக்கப்பட்டுள்ள தொப்பிகளை சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அணிவதைக் காண்கின்றோம். ஆனால் முஆவியா (ரழி) அவர்கள் மிம்பரில் சுட்டிக் காட்டும் அளவிற்குப் பாரதூரமானதாக அதை விளங்கியிருந்தார்கள். ஒட்டு முடி வைத்தவர்களை அல்லாஹ் சபித்தான் எனும் ஹதீஸ்களை நாம் அறிந்துள்ளோம். ஆனால் இதே ஒட்டு முடியை வைத்ததன் காரணமாக அல்லாஹ் ஒரு சமூகத்தையே அழித்துள்ளான் என்பதை முஆவியா (ரழி) அறிவிக்கும் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது. முஆவியா (ரழி) அவர்கள் இரத்தத்தையே கவனிப்பவரல்ல என்றுதான் வரலாற்றில் நமக்குக் காட்டியுள்ளார்கள். ஆனால் அவர்களோ ஒட்டு முடியில் கூட மிகக் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்க முடிகின்றது. அவர்கள் அறிவித்திருக்கும் மற்றுமொரு ஹதீஸைக் கீழே அவதானிப்போம்.

صحيح مسلم 2436 – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ الْيَحْصَبِىِّ قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ يَقُولُ إِيَّاكُمْ وَأَحَادِيثَ إِلاَّ حَدِيثًا كَانَ فِى عَهْدِ عُمَرَ فَإِنَّ عُمَرَ كَانَ يُخِيفُ النَّاسَ فِى اللَّهِ عَزَّ وَجَلَّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَهُوَ يَقُولُ « مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِى الدِّينِ ». وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِنَّمَا أَنَا خَازِنٌ فَمَنْ أَعْطَيْتُهُ عَنْ طِيبِ نَفْسٍ فَيُبَارَكُ لَهُ فِيهِ وَمَنْ أَعْطَيْتُهُ عَنْ مَسْأَلَةٍ وَشَرَهٍ كَانَ كَالَّذِى يَأْكُلُ وَلاَ يَشْبَعُ ».

உமர் (ரழி) அவர்கள் காலத்தில் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத் தவிர்ந்த எனைய ஹதீஸ்களை அறிவிப்பதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கின்றேன். எனெனில் உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வுக்காக மக்களை அச்சத்தோடு வைத்திருந்தார். ‘அல்லாஹ் யாருக்கு நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுப்பான். நான் சொத்துக்களைப் பாதுகாப்பவன்தான். எவருக்கு நான் மனமுவந்து (பைத்துல் மாலிலிருந்து) சொத்துக்களைக் கொடுக்கின்றேனோ அவருக்கு அதில் அபிவிருத்தி செய்யப்படும், கேட்டதனாலும், எதிர்பார்த்ததன் காரணத்தாலும் யாருக்காவது நான் சொத்துக்களைக் கொடுத்தால் அவர் உணவுண்டும் வயிறு நிறையாதவரைப் போன்றவராவார்.’ என நபியவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன். என்று முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு ஆமிர் அல் யஹ்ஸபி
ஆதாரம் : முஸ்லிம் 2436

முஆவியா (ரழி) அவர்கள் காலத்தில் ரோம் பிரதேசம் போன்ற பல தேசங்கள் வெற்றிகொள்ளப்பட்டன. அதனால் அப்பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட கணிசமான கனீமத் பொருட்கள் முஆவியா (ரழி) அவர்களிடம் குவிந்து கிடந்ததனால் பலரும் முஆவியா (ரழி) அவர்களிடம் வந்து உதவி கோரத் தொடங்கினர். இந்த வேளையில்தான் முஆவியா (ரழி) அவர்கள் இந்த ஹதீஸை மக்களுக்கு எத்தி வைக்கின்றார்கள்.

முஆவியா (ரழி) அவர்களிடம் எத்தகைய ! பேணுதல் காணப்பட்டது என்பதை கீழ்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.

المستدرك 443 – عن أبي عامر عبد الله بن يحيى قال : حججنا مع معاوية بن أبي سفيان فلما قدمنا مكة أخبر بقاص يقص على أهل مكة مولى لبني فروخ فأرسل إليه معاوية فقال : أمرت بهذه القصص ؟ قال : لا قال : فما حملك على أن تقص بغير إذن ؟ قال : ننشىء علما علمناه الله عز و جل فقال معاوية : لو كنت تقدمت إليك لقطعت منك طائفة ثم قام حين صلى الظهر بمكة فقال : قال النبي صلى الله عليه و سلم : إن أهل الكتاب تفرقوا في دينهم على اثنتين و سبعين ملة و تفترق هذه الأمة على ثلاث و سبعين كلها في النار إلا واحدة و هي الجماعة و يخرج في أمتي أقوام تتجارى بهم تلك الأهواء كما يتجارى الكلب بصاحبه فلا يبقى منه عرق و لا مفصل إلا دخله و الله يا معشر العرب لئن لم تقوموا بما جاء به محمد صلى الله عليه و سلم لغير ذلك أحرى أن لا تقوموا به

நாங்கள் முஆவியா (ரழி) அவர்களுடன் ஹஜ் செய்தோம். நாம் மக்காவை அடைந்த போது பனூ பரூஹ் கோத்திரத்தின் அடிமையொருவர் மக்கா வாசிகளுக்கு பலதரப்பட்ட கதைகளைச் சொல்லிவருவதாக அறிவிக்கப்பட்டது. முஆவியா (ரழி) அந்நபரிடம் ஒருவரையனுப்பி வரவைத்து ‘இந்தக் கதைகளைச் சொல்லுமாறு நீர் ஏவப்பட்டுள்ளீரா?’ என விசாரித்தார்.

அதற்கவர் ‘இல்லை’ என்று பதில் சொன்னார். ‘அனுமதியில்லாமல் இவ்வாறு கதைசொல்ல உம்மைத் தூண்டியது எது’ என்று முஆவியா (ரழி) அந்நபரிடம் கேட்டார்கள். ‘அல்லாஹ் வழங்கிய அறிவை மக்களுக்கு நாம் எத்தி வைக்கின்றோம்’ என்று கூறினார். ‘ஹஜ் காலமல்லாத வேறொரு காலத்தில் நான் வந்திருந்தால் உன்னை வெட்டியிருப்பேன்’ என்று அவரிடம் முஆவியா (ரழி) அவர்கள் கூறினார்கள். பின்னர் மக்காவில் ழுஹரைத் தொழுதுவிட்டு எழுந்த முஆவியா (ரழி) அவர்கள் ‘வேதக்காரர்கள் தமது மார்க்கத்தில் 72 பகுதிகளாகப் பிரிந்தார்கள். இந்த சமுதாயம் 73 பிரிவுகாகப் பிரியும். அதில் ஒன்றைத் தவிர மற்றைய அனைத்தும் நரகம் செல்லும். அந்த ஒன்று ஒரு ஜமாஅத்தாகும். வெறிபிடித்த நாய்…….. போன்று மனோ இச்சைகளால் துவண்டு போன ஒரு கூட்டம் எனது சமூகத்திலிருந்து வெளிப்படும். அவர்களின் நரம்பு நாளங்களிலெல்லாம், மூட்டுக்களிலெல்லாம் மனோ இச்சைகள் நுழைந்திருக்கும். அரபு சமுதாயமே முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை நீங்கள் நிலைநாட்டவில்லையென்றால் மற்றையவர்கள் செய்யாததை வைத்து உங்களால் குறைகூற முடியாது’ என நபியவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.


அறிவிப்பவர்: அபூஆமிர் அப்துல்லாஹிபனு யஹ்யா
ஆதாரம் : ஹாகிம்443

‘அழைப்புப் பணியை நீங்களே செய்யவேண்டும். மனோ இச்சைக்குக் கட்டுப்படக் கூடாது’ என்றெல்லாம் முஆவியா (ரழி) அவர்கள் பேசியுள்ளார்கள் என்றால் எந்த அளவிற்கு மார்க்கத்தில் உறுதியாகவும், பேணுதலாகவும் அவர் இருந்திப்பார் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

صحيح مسلم 7032 – عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ خَرَجَ مُعَاوِيَةُ عَلَى حَلْقَةٍ فِى الْمَسْجِدِ فَقَالَ مَا أَجْلَسَكُمْ قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ. قَالَ آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ قَالُوا وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ أَمَا إِنِّى لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ وَمَا كَانَ أَحَدٌ بِمَنْزِلَتِى مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- أَقَلَّ عَنْهُ حَدِيثًا مِنِّى وَإِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- خَرَجَ عَلَى حَلْقَةٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ « مَا أَجْلَسَكُمْ ». قَالُوا جَلَسْنَا نَذْكُرُ اللَّهَ وَنَحْمَدُهُ عَلَى مَا هَدَانَا لِلإِسْلاَمِ وَمَنَّ بِهِ عَلَيْنَا. قَالَ « آللَّهِ مَا أَجْلَسَكُمْ إِلاَّ ذَاكَ ». قَالُوا وَاللَّهِ مَا أَجْلَسَنَا إِلاَّ ذَاكَ. قَالَ « أَمَا إِنِّى لَمْ أَسْتَحْلِفْكُمْ تُهْمَةً لَكُمْ وَلَكِنَّهُ أَتَانِى جِبْرِيلُ فَأَخْبَرَنِى أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِى بِكُمُ الْمَلاَئِكَةَ ».

பள்ளியிலிருந்த மக்கள் கூட்டத்திடம் சென்ற முஆவியா (ரழி) அவர்கள் ‘உங்களை அமர்த்தியது எது?’ என்று வினவிய போது ‘அல்லாஹ்வை நினைவு படுத்துவதற்காக அமர்ந்துள்ளோம்.’ என அவர்கள் கூறினர். ‘அல்லாஹ்வுக்காகவா அமர்ந்தீர்கள்? அதுவல்லாத வேறொன்றுமில்லையா’ என்று அவர்களிடம் முஆவியா (ரழி) அவர்கள் கேட்டார்கள். ‘அல்லாஹ் மீது ஆணையாக வேறெதற்காகவும் நாம் அமரவில்லை’ என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரழி) அவர்கள் ‘பொய் சொன்னீர்கள் என்பதற்காக நான் உங்களிடம் சத்தியம் செய்து கேட்கவில்லை.

என்னைப் போன்று நபியவர்களோடு நெருக்கமாகவிருந்து குறைந்த ஹதீஸ்களை அறிவித்தவர் யாருமில்லை. ஒரு முறை நபியவர்கள் கூட்டமாகவிருந்த தன் தோழர்களிடம் சென்று ‘உங்களை அமர்த்தியது எது?’ என்று கேட்ட போது ‘இஸ்லாத்தின் பால் எங்களுக்கு வழிகாட்டியதற்காகவும், அதை எங்களுக்கு அருளாக்கியதற்காகவும் அல்லாஹ்வை நினைவு படுத்தி, அவனைப் புகழ்வதற்காக அமர்ந்துள்ளோம்.’ என்று அத்தோழர்கள் கூறினர். அதற்கு நபியவர்கள் ‘அல்லாஹ்வுக்காகவா அமர்ந்தீர்கள்? அதுவல்லாத வேறொன்றுமில்லையா’ எனக்கேட்டார்கள். ‘அல்லாஹ் மீது ஆணையாக வேறெதற்காகவும் நாம் அமரவில்லை’ என்று அத்தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபியவர்கள் ‘பொய் சொன்னீர்கள் என்பதற்காக நான் உங்களிடம் சத்தியம் செய்து கேட்கவில்லை. ஏனென்றால் அல்லாஹ் மலக்குமார்களிடம் உங்களைப் பற்றிப் பொருமையாகப் பேசுவதாக ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்’. என்று நபியவர்கள் சொன்னதாக முஆவியா (ரழி) கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூஸஈதுல் குத்ரி (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்7032

அல்லாஹ்வை நினைவுபடுத்துபவர்களைப் பார்த்து அல்லாஹ் பெருமைப் படுகின்றான் என்ற ஹதீஸ்களை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் நபித்தோழர்களில் ஒரு கூட்டத்தினரைப் பற்றி மலக்குமார்களிடம் அல்லாஹ் பொருமையாகப் பேசுவதாக வருகின்ற செய்தியை முஆவியா (ரழி) அவர்கள் அறிவவித்துள்ள இந்த ஹதீஸிலிருந்துதான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *