மறுமை நாளில் விசாரணை*
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார் என்று கூறினார்கள்.
அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! எவரது வினைப் பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்என்றல்லவா அல்லாஹ் கூறுகின்றான்? (84:8) என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர் களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி : 6537

BySadhiq

Jul 11, 2021

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *