*மறுமையில் கிடைக்கக்கூடிய ஒரு மரத்திற்கு பகரமாக இம்மையில் ஒரு தோட்டத்தையே தியாகம் செய்த அபூதல்ஹா ரலியல்லாஹு அன்ஹு.*

—————————————————-

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், *அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்குச் சொந்தமான ஒரு பேரீத்த மரம் (என் தோட்டத்தை ஒட்டி) இருக்கிறது. (அதை அவர் எனக்குக் கொடுத்தால்) அதையும் சேர்த்து எனது சுற்றுச்சுவரை அமைத்துக் கொள்வேன். அதை எனக்கு வழங்குமாறு அவருக்கு உத்தரவிடுங்கள்* என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் அன்னாரிடம், *அதை நீ கொடுத்து விடு! உனக்குச் சுவனத்தில் அதற்குப் பகரமாக ஒரு மரம் கிடைக்கும்* என்று கூறினார்கள். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

அப்போது, அபூதல்ஹா(ரலி) அவர்கள் அவரிடம் வந்து, *என்னுடைய தோட்டத்திற்கு பகரமாக உன்னுடைய ஒரு மரத்தை எனக்கு விற்பனை செய்துவிடு* என்று கூறினார். அவரும் விற்று விட்டார்.

உடனே, அபூதல்ஹா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, *அல்லாஹ்வின் தூதரே! எனது தோட்டத்திற்குப் பகரமாக அந்த மரத்தை நான் வாங்கிவிட்டேன். இதை உங்களிடம் கோரிக்கை வைத்தவருக்கு நீங்கள் கொடுப்பதற்காக உங்களிடம் தந்து விட்டேன்* என்று கூறினார்கள்.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *எத்தனையோ பேரீத்த மரங்கள் சுவனத்தில் அபூதல்ஹாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன* என்று பல முறை கூறினார்கள்.

உடனே, அபூ தஹ்தாஹ் (ரலி) அவர்கள் தனது மனைவியிடத்தில் வந்து, *உம்மு தல்ஹா! உடனே இந்த தோட்டத்திலிருந்து வெளியேறு! ஏனெனில் சுவனத்தில் கிடைக்கவிருக்கும் பேரித்த மரத்திற்காக இந்தத் தோட்டத்தை நான் விற்றுவிட்டேன்* என்று கூறினார்.

அதற்கு அவருடைய மனைவி, *இதுவே லாபகரமான வியாபாரம்* என்றோ அதற்கு ஒப்பான வார்த்தையையோ கூறினார்கள்.

நூல்: *அஹ்மது 12025*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed