இறந்தவரின் மறுமை நன்மைக்காக செய்ய வேண்டியவை

1.இறந்தவர் விட்டுச்சென்ற கடன்களை அடைத்தல்

( பார்க்க நூல்: புகாரி 2291, 2295)

2.இறந்தவருக்காக இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்தல்.குறிப்பாக இறந்தவரின் பிள்ளைகள் துஆச் செய்வது இறந்தவருக்குப் பெரிதும் பயன் தரும்.(பார்க்க நூல்: முஸ்லிம் 3084)

3.இறந்தவரின் நன்மைக்காக தர்மம் செய்தல்

(பார்க்க நூல்: புகாரி 1388, 2760)

4.இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.

(பார்க்க நூல்: புகாரி 1852, 7315)

5.இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.

(பார்க்க நூல்: புகாரி 1952,1953)

6.இறந்தவர் ஏதேனும் வஸிய்யத் (மரண சாசனம்) செய்து மரணித்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்.

( பார்க்க குர்ஆன் 2:180)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed