*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*

*மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம்*.

*வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.*

*மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது.*

எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே.

*ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும் இழுத்துச் செல்பவருடனும், சாட்சியுடனும் வருவர்*.

இதில் தான் நீ அலட்சியமாக இருந்தாய். *உன்னை விட்டும் உனது திரையை நீக்கி விட்டோம்.*

இன்று உனது பார்வை கூர்மையாகவுள்ளது. (எழுதும் வானவராகிய) அவரது கூட்டாளி *இதோ என்னிடம் எழுதப்பட்ட ஏடு இருக்கிறது*

என்பார்.

[அல்குர்ஆன் *50:16-23]*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *