மது அருந்தியவரின் நாற்பது (40) நாட்கள் தொழுகை ஏற்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?
இது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நஸாயி, முஸ்னத் அஹ்மத் மற்றும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
என் சமுதாயத்தில் மது அருந்தும் ஒருவனின் நாற்பது நாட்களின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : நஸாயீ 3456