புகை பிடித்தல் ஒரு பாதகச் செயல்

நமது மார்க்கம் அனுமதிக்காத காரியங்களில் ஒன்று புகை பிடிக்கும் பழக்கமாகும்.

உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்!

(அல்குர்ஆன் 4:29)

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

அல்குர்ஆன் 2:195

உங்களையே நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள் என்று இந்த வசனத்தில் வல்ல அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆனால் புகை பிடிப்பவர் தானும் கெட்டு, தன் உடல் நலத்தையும் கெடுப்பதோடு மட்டுமன்றி தனது சுற்றுப்புறச் சூழல், குடும்பத்தினர், அண்டை அயலாரின் நலனையும் கெடுத்து விடுகின்றனர்.

புகையிலையிலிருந்து 300க்கும் அதிகமான நச்சுப் பொருட்கள் (பர்ஷ்ண்ய்ள்) வெளியாகின்றன. அவற்றில் அதிகம் கேடு விளைவிப்பவை, 1. நிகோடின், 2. கார்பன் டை ஆக்ஸைடு, 3. கார்பன் மோனாக்ஸைடு, 4. கார்பன் டெட்ரா குளோரைடு ஆகியவையாகும். இவை அனைத்தும் கரியமில வாயுடன் தொடர்புடையவை.

புகை பிடிப்பதால் உதடுகள், நாக்கு, வாயின் உட்பகுதி, கன்னம், மூக்கின் இரு பகுதியில் உள்ள சைனஸ் (நண்ய்ன்ள்), தொண்டை, பேரிங்ஸ், லாரிங்ஸ் , உணவுக்குழாய், காற்றுக் குழாய், நுரையீரலுக்குள் செல்லும் சிறு காற்றுக் குழாய்கள், நுரையீரல், நுரையீரலைச் சுற்றியுள்ள உறை, இரைப்பை, கல்லீரல், சிறு குடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், ஆண் பெண் ஜனன உறுப்புக்கள், இதயம், மூளை, கண்கள் ஆகிய உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகின்றன. அதாவது கிட்டத்தட்ட எல்லா உறுப்புக்களும் பாதிக்கப்படுகின்றன.

பெரிய, சிறிய, நடுத்தர இரத்தக் குழாய்களைச் சுற்றியுள்ள சிறிய தசைகளை (நம்ர்ர்ற்ட் ம்ன்ள்ஸ்ரீப்ங்ள்) நிக்கோடினும், பிற நச்சுப் பொருட்களும் சுருங்கச் செய்து இரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, இரத்த ஓட்டத்தைக் குறைக்கின்றன. இதனால் உடல் உறுப்புக்கள் படிப்படியாகச் செயலிழக்கின்றன.

மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் கரோடிட் இரத்தக் குழாய்களும், அதன் கிளைகளும் சுருங்கி மூளையின் செல்களுக்குக் குறைவான இரத்தம் செலுத்தப் படுவதால் பக்க வாதம் ஏற்படுகின்றது.
கண்களுக்கு இரத்தம் அளிக்கும் முக்கியக் குழாய்களில் சுருக்கம் ஏற்பட்டு விழித்திரை பழுதடைந்து, திடீர் பார்வையிழப்பு ஏற்படுகின்றது.காதுக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் சுருக்கம் ஏற்படுவதால் ஆக்ஸிஜன் சப்ளையின்றி கேட்கும் திறன் பாதிக்கப்படுகின்றது.

ஒரு வீட்டில் கணவரோ, அல்லது தந்தையோ, சகோதரனோ புகை பிடிப்பவராக இருப்பாரானால் அவர்கள் இவர்களது மூச்சிலிருந்து வெளிப்படும் நச்சுப் பொருட்களை வீட்டில் உள்ள பெண்கள் அல்லது மற்ற ஆண்கள் சுவாசிப்பதால் அவர்கள் அந்த பாதிப்புக்கு ஆளாகிகிறார்கள்.
தாயிடம் பால் அருந்தும் குழந்தைகளும் இந்த நச்சுக் காற்றைச் சுவாசிப்பதிலிருந்து தப்பிப்பதில்லை. அந்தப் பச்சிளம் குழந்தைகள் நுரையீரல் நோய்களாலும், அஜீரணம், வயிற்றுப் போக்கு போன்ற பல்வேறு வியாதிகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

கருவுற்ற தாய்மார்களின் கருவில் உள்ள சிசு போதிய இரத்த சப்ளையின்றி குறைப் பிரசவமாகி விடுகின்றன. தப்பித் தவறி முழு வளர்ச்சி அடைந்தாலும் மன நலம், உடல் நலம் குன்றிய குழந்தைகளாகப் பிறக்கின்றன. ஆண்களுக்கு ஆண் தன்மை குறைந்து மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது. கருச் சிதைவுக்கு முக்கிய காரணமே கணவன்மார்களின் புகைப் பழக்கம் தான். கர்ப்பப்பை, கருப்பை கட்டிகளுக்கும் மூல காரணம் கணவன் புகைப் பிடிப்பது தான்.

ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முதல் காரணி புகை தான். புகைப் பழக்கத்தால் இரத்தக் குழாய்கள் அனைத்தும் சுருங்கி அடைப்பு ஏற்படுகின்றது. இதயத்திற்குச் சுத்தமான இரத்தத்தை விநியோகிக்கும் மூன்று முக்கிய பெரிய இரத்தக் குழாய்களும் அவற்றின் கிளைகளும் சுருங்கி விடுகின்றன. இதனால் இதயத்தின் தசைக்குப் போதுமான சுத்த இரத்தம் கிடைக்காமல் இதயத் தசை கெட்டு, மாரடைப்பு ஏற்படுகின்றது.

புகை பிடிப்பதால் நுரையீரலில் ஏற்படும் ஆஸ்துமா, அலர்ஜி, பிராங்கேடிஸ், நிமோனியா, காச நோய் ஆகியவை விரைவில் தொற்றிக் கொள்கிறது. நாக்கு, தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்க்கு புகையே மூல காரணமாகும்.
இரண்டு கால்களுக்கும் செல்லும் பெரிய இரத்தக் குழாய் மற்றும் கிளைக் குழாய்களின் சுருக்கத்தால் ‘துராம்போ ஆன்ஜைடிஸ் ஒப்லிட்டிரான்ஸ்’  என்ற அடைப்பு நோய் ஏற்பட்டு கால்களிலும், கால் விரல்களிலும் அடைப்பு உண்டாகிறது.

இதனால் தாங்க முடியாத வலி ஏற்படுவதுடன், நாளடைவில் இரத்தம் செல்வது முற்றிலும் தடைப்பட்டு ஒவ்வொரு விரலாகக் கருகி விடுகின்றது. இது போன்று கருகிய விரல்களை ஒவ்வொன்றாக வெட்டி எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. தொடர்ந்து புகை பிடித்தால் கணுக்கால், நடுக்கால், நடுத் தொடை, இடுப்பு என காலை வெட்டி எடுக்கும் நிலை தொடரும் என்பது கண்கூடு! தொடர்ந்து புகை பிடிக்கும் ஓர் ஆண் மகனுக்கு ஆண் தன்மை குறைவதுடன் விந்துவிலுள்ள உயிரணுக்கள் உற்பத்தியின்றி இரண்டு விதைகளும் சுருங்கி விடுகின்றன.

கடுமையான பொருளாதாரச் சீர்குலைவிற்கும், உடலின் ஒவ்வொரு பாகமாக உறுப்புகளை இழப்பதற்கும், எதிர்பாராத நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் முழு முதற் காரணமான புகைப் பழக்கம் தேவை தானா? புகை உங்கள் உடலுக்குப் பகை என்பதைச் சிந்தியுங்கள் செயல்படுங்கள். இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed