பிறமதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள்

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது,

ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான்.

இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும்போது எதிர் மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களால் இந்த நிலை ஏற்படுகிறது.

ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துக்களை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும்போது அது போன்ற எதிர்த்தாக்குதலில் இறங்குகிறார்கள்.

எனவே, பிறமத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.

‘உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளிவாசல் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்’ என்ற அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.

கோவில்களோ, சர்ச்சுகளோ, முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாதபோதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed