பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று நவீன கால பெண்களின் ஆடை முறைகளே. பெண்கள் தங்களின் உடலை இஸ்லாம் சொல்லும் முறைப்படி மறைத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்களை பெருமளவில் குறைக்க முடியும். அதேபோல் பெண்கள் ஆண்களிடம் குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலம் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என குர்ஆன் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றது.

‘… நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்’ அல்குர் ஆன் (33.32)

குர்ஆனின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணமாக இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுப் பெண்கள் இந்திய வாலிபர்களின் தொல்லை தாங்க முடியாமல் உடலை மறைப்பதன் மூலமும், குழைந்து பேசுவதை தவிற்பதன் மூலமும் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

இந்திய வாலிபர்களால் தொல்லைக்கு ஆளான வெளிநாட்டுப் பெண்களை சந்தித்து அவர்கள் பட்ட தொல்லைகள், அதை தவிற்க அவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகளை பேட்டி எடுத்து தி வீக் (வுhந றுநநம) பத்திரிக்கை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.

அதில்…

நெதர்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் அன்னிமிகி ஸ்பிட்சி, டெல்லியில் படித்துக்கொண்டு இருகின்றார். அவர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்… நான் மேற்கத்திய பாணியில் (அறைகுறை) ஆடைகள் அணிந்து செல்லும்போது ஆண்களின் தொல்லைக்கு ஆளானேன். ஒரு முறை பழைய டெல்லியில் சாலையை கடக்க முயன்றபோது ஒருவன் என்னை தொட்டு சில்மிஷம் செய்தான். நான் பேருந்தில் பயணிக்கும்போது வேண்டும் என்றே என்னை உரசுவது, பிறகு, ‘சாரி’ சொல்வது ஆண்களுக்கு வாடிக்கையாய் போய்விட்டது. இதைத் தடுக்க நான் இப்போதெல்லாம் உடலை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிகின்றேன். வெளியில் போகும்போது ஸ்கார்ப்ஃபை அணிந்து செல்கின்றேன். இப்போது என்மீதான ஆண்களின் பார்வையை தடுக்க முடிகின்றது. ஓரளவிற்கு பாதுகாப்பை உணரமுடிகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இவரைப்போல் பாதிக்கப்பட்ட லிஸ் கிரீன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்மனி கூறுகையில்… ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க நான் இபோது ஆண்களிடம் குழைந்து பேசுவது இல்லை. கடுமையாகவே நடந்துகொள்கின்றேன். ஆண்களைப் பார்த்து புன்னகை புரிவதில்லை. இதன் மூலம் நாம் பாதுகாப்பாக இருந்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மனித குலத்திற்கு நடைமுறைப்படுத்த கூடிய சிறந்த நடைமுறையையே வழங்குகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையிலிருந்து தீர்வை வழங்குகின்றது. பாதிக்கப்பட்ட இந்த பெண்கள் முஸ்லிம்கள் இல்லை. இவர்கள் ஆண்களின் தொல்லைகளை அனுபவித்து அதில் இருந்து தப்பிக்க இஸ்லாம் சொல்லும் தீர்வைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்.

இப்படி பிரச்சனைகளை சந்திக்காத, அல்லது இதுபோன்ற கேவலத்தை விரும்புபவர்கள்தான் இஸ்லாம் சொல்லும் தீர்வை எதிர்க்கின்றனர். ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து தற்காத்துக் கொள்ள மானம் உள்ள எவரும் இஸ்லாம் சொல்லும் உடலை மறைத்தல், ஆண்களிடம் கண்டிப்புடன் பேசுதல் போன்ற தீர்வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லக்கூடிய தீர்வுகள்தான் சரியானவை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் உண்மைப்படுத்திக் கொண்டுள்ளன.

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் பெண்களை ஒரு காமப் பொருளாக பார்க்கவே இவர்கள் பெண்களின் மானத்தைக் காக்கும் பர்தா முறையை எதிர்க்கின்றார்கள். பர்தா எதிர்ப்பு என்பது ஆண்களின் காம இச்சையின் வெளிப்பாடே தவிர ஒழுக்கமுள்ள மனிதனின் பண்பாகாது. எனவே பெண்கள் பர்தா அணிவதை வலியுறுத்துவோம். பெண்களின் மானம் காக்கும் பண்பாளர்களாவோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *