பட்டாடை அணியலாம்

    ஆண்கள் பட்டாடை அணிவதற்கு தடை உள்ளது. ஆனால் பெண்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட  பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப்பாக) வழங்கினார்கள். ஆகவே, அதை நான் அணிந்துகொண்டேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களடையே பங்கிட்டுவிட்டேன்.

அறிவிப்பவர் : அலீ (ரலி) 

நூல் : புகாரி (5366)

காவிநிற ஆடையை அணியலாம்

    காவிநிறத்தை அதாவது குங்குமப்பூ நிறத்தை ஆண்கள் பயன்படுத்துவது கூடாது. பெண்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. 

ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி (5846)

பெண்கள் இஹ்ராம் நிலையில் இருக்கும் போது முகத்திரையையும் கையுறைகளையும் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடையையும் அணிவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அதற்குப் பிறகு (சாதாரண நேரத்தில்) அவள் விரும்பும் வண்ண ஆடைகளையும் குங்குமப்பூ நிறத்திலுள்ள ஆடையையோ பட்டாடையையோ ஆபரணத்தையோ சிர்வாலையோ நீளங்கியையோ காலுறையையோ அணிந்துகொள்ளட்டும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : அபூதாவுத் (1556)

ஆண்களின் ஆடைகளை அணியக்கூடாது

ஆண்கள் பெண்களைப் போன்று நடப்பதையும் பெண்கள் ஆண்களைப் போன்று நடப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் ஆண்களின் ஆடைகளை பெண்கள் அணிந்துகொண்டு இருக்கிறார்கள். இது தவறாகும். 

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களும் சபித்தார்கள் .

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (5885)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed