*நோய் என்பதும் சோதனையே..*

—————————————————

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், *அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்* என்று தெரிவித்தார்கள்.

மேலும், *கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள(விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது* என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் *இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : *புகாரி 3474, 5734*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, *அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!* என்று கேட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், *ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்* என்று சொன் னார்கள்.

நான், *(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?* என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் *ஆம்* என்று கூறிவிட்டுப் பிறகு, *ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை* என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : *புகாரி 5660*

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், *சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?* என்று கேட்டார்கள். நான் *சரி! (காட்டுங்கள்)* என்று சொன்னேன். அவர்கள், *(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் வலி ப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்.*

*அப்போது (என் உடலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்* என்றார். நபி (ஸல்) அவர்கள், *நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்* என்று சொன்னார்கள்.

இப்பெண்மணி *நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்* என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் *இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்* என்றார்கள்.

நூல் : *முஸ்லிம் 5032*

இன்று போன்ற நோய்களின் மூலம் சோதனைகள் வரும் போது நமக்கு ஏற்பட்டுள்ள *நோய்க்கு பகரமான உடல் நலத்தை, அல்லது வேறு விதமான நன்மைகளை வழங்குவான்* என்ற நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed