நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா❓

நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியையும் ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

அபூ நஜீஹ் இர்பாள் பின் சாரியா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான உரையை ஆற்றினார்கள். அதைக் கேட்டால் உள்ளங்கள் நடுங்கும். கண்களில் கண்ணீர் வரும். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது பிரியக்கூடியவர் ஆற்றும் உரையைப் போன்று இருக்கின்றதே?

எனவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுவதையும் அபிசீனிய அடிமை உங்களுக்கு தலைவரானாலும் நீங்கள் செவியேற்று கட்டுப்படுவதையும் உங்களுக்கு நான் வலிறுத்துகிறேன்.

உங்களில் (எனக்குப் பின்பு) வாழ்பவர் அதிகமான வேறுபாடுகளை காண்பார்.

அப்போது நீங்கள் எனது வழியையும் நேர்வழிகாட்டப்பட்டு நேர்வழியில் செல்லும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

கடவாய் பற்களால் அதை (வலுவாக) பிடித்துக் கொள்ளுங்கள்.

புதுமையான விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்.

நூல் : திர்மிதீ (2676) அபூதாவுத் (4607)

நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களின் வழியைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆட்சி செய்த அபூபக்ர் (ரலி). உமர் (ரலி). உஸ்மான் (ரலி). அலீ (ரலி) ஆகிய நான்கு கலீபாக்களை மார்க்க விசயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்றாலும் இவர்களின் வாதத்திற்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

இவர்கள் கூறும் கருத்தை நிராகரிக்கும் வகையில் தான் இந்த நபிமொழி அமைந்துள்ளது.

இவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் இவர்கள் குறிப்பிடுகின்ற நான்கு சஹாபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற யாரையும் பின்பற்றக்கூடாது. ஆனால் இவர்கள் இந்த நான்கு சஹாபாக்கள் அல்லாத மற்ற நபித்தோழர்களையும் ஏன் நபித்தோழர்களல்லாத தாபியீன்கள் இமாம்கள் ஊர் பெரியார்கள் என்று கணக்கு வழக்கில்லாமல் பின்பற்றுகின்றனர். பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்கு மேற்கண்ட செய்தி போதிய ஆதாரமாக ஆகாது என்றாலும் இதை ஆதாரமாக இவர்கள் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உள்ளது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற கருத்தைத் தகர்ப்பதற்கு இந்தச் செய்தி உதவும் என்று நம்புகின்றனர்.

இந்த நபிமொழியும் இவர்களின் வாதத்திற்கு எதிராக விதத்தில்தான் அமைந்துள்ளது. தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று நினைத்துக் கொண்டு தங்களுக்கு எதிரான ஆதாரத்தையே கூறியுள்ளனர்.

இந்த ஹதீஸில் இவர்கள் வைக்கும் வாதம் பல காரணங்களால் தவறாகும். அந்தக் காரணங்களை ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம்.

நான்கு கலீபாக்களை மட்டுமா பின்பற்ற வேண்டும்?

இந்த ஹதீஸில் எனது வழிமுறையையும் நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழி முறையையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நான்கு கலிபாக்களின் வழிமுறைகளை என்று கூறவில்லை.

குலஃபாய ராஷிதீன்கள் என்று கூறப்படுவது அபுபக்ர் (ரலி), உமர் (ரலி). உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகிய நால்வர் தான் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுக்கிறார்கள்.

அது தவறு, நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்போர் இந்த நால்வர் தான் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பிறகு 12 நேர்வழி பெற்ற ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள் என்றும் கூறினார்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், “பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்” என்று சொல்ல நான் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்த போது) என் தந்தை (சமுரா-ரலி) அவர்கள், “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி (7223)

நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய ஆட்சி அமைப்பின் அடிப்படையில் அந்தப் பன்னிரென்டு பேரும் ஆட்சி செய்வார்கள் என்று முஸ்லிமில் இடம்பெற்றுள்ள அறிவிப்பு கூறுகின்றது.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்” என்று சொல்லக் கேட்டேன்.

முஸ்லிம் (3719)

இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இஸ்லாம் வலிமையோடும் பாதுகாப்போடும் இருக்கும் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும் என்று சொல்லக் கேட்டேன்.

முஸ்லிம் (3722)

எனவே நேர்வழிபெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிட்ட முதல் நான்கு கலீபாக்களை மட்டும் குறிக்காது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த 12 ஆட்சித் தலைவர்களையும் குறிக்கும்.

அந்த பன்னிருவரின் பெயர் பட்டியல் கூட இருக்கிறது.

அபுபக்கர் அடுத்து உமர்,
மூன்றாவது உஸ்மான்,
நான்காவது அலி,
ஐந்தாவது அப்துல்லாஹ் இப்னு சுபைர்,
ஆறாவது அப்து மலிக் இப்னுல் மர்வான்,
ஏழாவது அல் வலிது இப்னு அப்துல் மலிக்,
எட்டாவது ஸுலைமான் பின் அப்துல் மலிக்,
ஒன்பதாவது உமர் பின் அப்துல் அஜீஸ்,
பத்தாவது யஸீது இப்னு அப்துல் மலிக்,
பதினொன்றாவது ஹிசான் இப்னு அப்துல் மலிக்,
பன்னிரெண்டாவது வலிது இப்னு யஸிது இப்னு அப்துல் மலிக்

முஆவியாவை விட்டு விடுவார்கள். முஆவியாவும் ஒரு வகையில் நல்லாட்சி செய்பவராகத்தான் இருந்தார். அவரைச் சேர்த்துக் கொண்டால் கடைசியாக உள்ள ஒரு நபரைக் கழித்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பன்னிரெண்டு பேரில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர், உமர் இப்னு அப்து அஜீஸ் முதல் நான்கு கலிபாக்கள் இவர்களைத் தவிர்த்து பார்த்தால் மீதமுள்ள ஆறு பேரும் மார்க்கத்திற்கு மாற்றமான நிறைய தவறுகளைச் செய்திருக்கிறார்கள்.

இவர்களின் வாதப்படி இந்த 12 கலீபாக்களையும் மார்க்க விசயத்தில் பின்பற்ற வேண்டும் என்று கூற வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு கூறுவதில்லை. முதல் நான்கு கலீபாக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.

எனவே இவர்கள் கூற வரும் கருத்திற்கும் இவர்கள் காட்டும் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அறியலாம். நபி (ஸல்) அவர்கள் இந்த கலீபாக்களை பின்பற்றச் சொன்னது இவர்கள் சொன்ன அர்த்தத்தில் அல்ல. வேறு பொருளில் என்பதையும் உணர முடியும். அதன் விளக்கத்தை அறிந்துகொள்வோம்.

மார்க்க விசயத்தில் பின்பற்றக் கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உருக்கமான உரையை ஆற்றினார்கள். அதைக் கேட்டால் உள்ளங்கள் நடுங்கும். கண்களில் கண்ணீர் வரும். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது பிரியக்கூடியவர் ஆற்றும் உரையைப் போன்று இருக்கின்றதே? எனவே எங்களுக்கு உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டோம். அப்போது அவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சுவதையும் அபிசீனிய அடிமை உங்களுக்கு தலைவரானாலும் நீங்கள் செவியேற்று கட்டுப்படுவதையும் உங்களுக்கு நான் வலிறுத்துகிறேன்.

உங்களில் (எனக்குப் பின்பு) வாழ்பவர் அதிகமான வேறுபாடுகளை காண்பார். அப்போது நீங்கள் எனது வழியையும் நேர்வழிகாட்டப்பட்டு நேர்வழியில் செல்லும் ஆட்சியாளர்களின் வழியையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். கடவாய் பற்களால் அதை (வலுவாக) பிடித்துக்கொள்ளுங்கள். புதுமையான விசயங்களை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு புதுமையும் வழிகேடாகும்.

நூல் : திர்மிதீ (2676) அபூதாவுத் (4607)

நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையைப் பற்றிப் பிடிக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது மார்க்க விசயத்தில் அவர்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் சொல்லவில்லை.

மார்க்க விசயத்தில் பின்பற்றுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழி நமக்கு இருக்கின்றது. அந்த வழிகாட்டல் கியாமத் நாள் வரை முஸ்லிம்களுக்குக் கிடைக்கக்கூடியது. மார்க்க சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இந்த சுன்னத்திலே இருக்கின்றது. எனவே தான் நபி (ஸல்) அவர்கள் என்னுடைய சுன்னத்தைப் பற்றிப்பிடியுங்கள் என்று முதலாவது குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருவார்கள். இவர்கள் சமுதாயத்தின் நன்மை கருதி எடுக்கும் உலக சம்பந்தமான முடிவுகளுக்கு மக்கள் கட்டுப்பட வேண்டும். சிறு சிறு பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளம்பினால் நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியாது. சமுதாயத்தின் கட்டமைப்பும் பாதுகாப்பும் சீர் குலைந்து போய்விடும். எனவேதான் நபி (ஸல்) அவர்கள் மார்க்க விசயத்தில் தன்னைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையுடன் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும் போதிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குறிபிட்ட நான்கு சஹாபாக்களை மட்டும் சொல்லாமல் தனக்குப் பிறகு வரும் 12 கலீபாக்கள் குறித்தும் அவர்களின் வழியைக் கடைப்பிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள். மார்க்க விசயத்தில் 12 கலீபாக்களையும் பின்பற்ற வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை.

மேலும் கறுப்பு நிற அடிமை உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் கட்டுப்பட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். கறுப்பு நிற அடிமையாக இருந்தாலும் மார்க்க விசயத்தில் கட்டுப்பட முடியுமா? இந்த வாசகம் நபி (ஸல்) அவர்களின் இந்த உத்தரவு மார்க்க விசயத்திற்கு பொருந்தாது என்பதைக் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தனக்குப் பின்னால் நீங்கள் அதிகமான கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த அதிகமான குழப்பங்கள் ஆட்சி விசயத்தில்தான் ஏற்பட்டது. ஆட்சி விவாகரத்தில் எனக்குப் பின்னால் பிரச்சனைகள் வரும் அப்போது பிரச்சனைகளில் ஈடுபடாமல் இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு கட்டுப்படுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்வரும் அறிவிப்பு இந்தக் கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed