*பலவீனமானச் செய்தி*

حدثنا ابن أبي عمر حدثنا سفيان عن أبي النضر مولى عمر بن عبيد الله عن زرعة بن مسلم بن جرهد الأسلمي عن جده جرهد قال مر النبي صلى الله عليه وسلم بجرهد في المسجد وقد انكشف فخذه فقال إن الفخذ عورة قال أبو عيسى هذا حديث حسن ما أرى إسناده بمتصل

*நான் தொடையைத் திறந்த நிலையில் இருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் தொடையை மூடு! ஏனெனில் அது மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுர்ஹுத் (ரலி)

நூல்கள்: திர்மிதீ 2720, அஹ்மத் 15367, 15368

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள *இமாம் திர்மிதீ அவர்களே இதன் அறிவிப்பாளர்களிடையே தொடர்பு விடுபட்டுள்ளது* எனக் கூறுகின்றார்.

இது குறித்து ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் ஏராளமான குழப்பங்கள் உள்ளன என்று ஹாபிழ் இப்னு ஹஜர் கூறுகின்றார்கள்.

தமது *தக்லீக் அத்தஃலீக் என்ற நூலில் ஜுர்ஹுத் வழியாக அறிவிக்கப்படும் 20க்கும் மேற்பட்ட அறிவிப்புக்களைப் பட்டியலிட்டு அறிவிப்பாளர்கள் பட்டியலில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.*

இன்னும் குழப்பமான அறிவிப்புக்கள் உள்ளன, அவற்றை எழுதினால் தனி நூலாகி விடும் என்றும் அவர் கூறுகின்றார்.

புகாரி இமாம் அவர்களும் தமது தாரீக் என்ற நூலில் இதைப் *பலவீனமானது* எனக் கூறியுள்ளார்கள்.

எனவே இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *