நான்கு வயது மகன் முன்னால் தாய் உடை மாற்றலாமா

பெரியவர்கள் தன்னுடைய அந்தரங்கமான பாகங்களை சிறு குழந்தைகளுக்கு முன்பு வெளிப்படுத்தக்கூடாது.

பின்வரும் வசனம் இதைத் தடைசெய்கின்றது.

பின்வரும் வசனங்களைச் சிந்தித்தால் இதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும்

இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (24 : 58, 59)

எந்த வீட்டுக்குள் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும்.

ஆனால் அந்த வீட்டாரின் அடிமைகள் மற்றும் சிறுவர்கள் அனுமதி கேட்காமல் வீட்டுக்குச் செல்லலாம்.

·ஆனால் அடிமைகளும், சிறுவர்களும் கூட பெண்கள் உபரியான ஆடைகளைக் களைந்து இருக்கும் மூன்று நேரங்களில் அனுமதி பெற்றுத் தான் செல்ல வேண்டும்.

ஆகிய சட்டங்கள் இவ்வசனங்களில் இருந்து கிடைக்கின்றன. சிறுவர்களாக இருந்தாலும் பெண்கள் உபரியான ஆடைகளைக் களைந்துள்ள நேரங்களில் திடீரென உள்ளே நுழையக் கூடாது.

உபரியான ஆடைகளைக் களைந்துள்ள நிலையில் பெண்களை பார்க்க்க் கூடாது என்பது தான் இதற்குக் காரணம்.

ஆனால் சிறுவர்கள் என்பது பிறந்த குழந்தை முதல் பருவ வயது வரை உள்ள பருவத்தைக் குறிக்கும் சொல்லாக இருந்தாலும் இந்த விஷயத்தில் அவ்வாறு புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அனுமதி கேட்டு செல்ல வேண்டும் என்ற விபரத்தைப் புரிந்து கொள்ளும் பருவத்தினரைத் தான் இது எடுத்துக் கொள்ளுமே தவிர அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்களை எடுத்துக் கொள்ளாது. இந்த நிலையை அடைய ஏழெட்டு வயதாவது ஆக வேண்டும். அதற்குக் கீழே உள்ள சிறுவர்களுக்கு இந்தச் சட்டம் கிடையாது.

மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும் என்ற சொல்லில் இருந்து இதனை அறியலாம்.

எனவே மூன்று நான்கு வயதுடைய சிறுவர்கள் முன்னல் உடை மாற்றுவதும் உபரியான ஆடைகள் இல்லாமல் இருப்பதும் தவறல்ல.

ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed