நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமின் போது திருமணம் செய்தார்களா?

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)
நூல் : முஸ்லிம் 2522, 2524, 2525, 2526

இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1837, 4259, 5114

ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.

அறிவிப்பவர் : மைமூனா (ரலி)
நூல் : முஸ்லிம் 2529

ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்ற,

மைமூனா (ரலி) திருமணம் தொடர்பான இந்த ஹதீஸின் தொடர் பக்காவான, பலமான தொடராகும்.

இவர்கள் கண்ணியத்திற்குரிய நபித்தோழர். அதனால் இப்னு அப்பாஸ் சிறிய வயதுடையவராக இருந்ததால் இந்தத் திருமண விஷயத்தைத் தவறாக விளங்கி அறிவித்து விட்டார்

என்று அந்த ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இது ஒரு காரணம்.

மற்றொரு காரணம்,

சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள், நாங்கள் இருவருமே இஹ்ராம் அல்லாத சாதாரண நிலையில் தான் திருமணம் முடித்தோம் என்று கூறிவிட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்புக்கு மாற்றமாக மைமூனா (ரலி) அறிவிக்கின்றார்கள். மேற்கண்ட இந்தக் காரணத்தால் இந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகிவிட்டது.

அல்லாஹ் மிக அறிந்தவன்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed