இவ்வசனங்களில் (7:157, 48:29, 61:6) தவ்ராத், இஞ்சீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனாவுக்கு வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்கள் வழியாக அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிப்து மற்றும் பாலஸ்தீன் பகுதிகளிலிருந்து மதீனாவுக்கு வந்து குடியேறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது அவர்களை முதலில் ஏற்பவர்களாக நாம் ஆக வேண்டும் என்பதே இந்தக் குடியேற்றத்துக் காரணம். ஆனால் அவர்களின் வாரிசுகளோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தபோது அவர்களை இறைத்தூதர் என்று அறிந்து கொண்டே ஏற்க மறுத்தனர். தமது பதவியும், செல்வாக்கும் போய் விடும் என்று அஞ்சினர். அதுதான் இவ்வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.