தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா?https://www.onlinetntj.com/kelvipathil/thoppiu-anithu-tholum-nanmaigal

தொப்பி அணிந்து தொழுவது உப்புள்ள உணவைச் சாப்பிடுவதைப் போன்றது. தொப்பி அணியாமல் தொழுவது உப்பில்லாத உணவை உண்பதைப் போன்றது என்று இமாம் மாலிக் கூறினார் என்று சொல்பவர்கள் அவர் எந்த நூலில் அவ்வாறு கூறியுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மாலிக் இமாம் வாழ்ந்த காலத்தில் அவரது பகுதியில் சோறு சாப்பிடும் பழக்கமே இல்லை என்பதே இதன் தரத்தை உங்களுக்குக் கூறி விடும்.

இமாம் மாலிக் அவர்கள் உண்மையில் அப்படிக் கூறியிருந்தாலும் அதை நாம் ஏற்கத் தேவையில்லை. ஏனென்றால் திருக்குர்ஆன் அடிப்படையிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலும் மட்டுமே மார்க்கப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

திருக்குர்ஆனையும். ஹதீஸ்களையும் ஆய்வு செய்யும் போது தொப்பிக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.

இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை விட தொப்பி முஸ்லிம்களிடம் முதலிடம் பெற்றுள்ளது. குறிப்பாக தொழும்போது ஒருவர் தொப்பி அணியவில்லையென்றால் அவர் தொழுவதற்குத் தகுதியற்றவர் என்று எண்ணுகின்றனர். இதில் ஆலிம்களும் அடக்கம்.

எனவே பல பள்ளிவாசல்களில் “தொப்பி அணியாமல் தொழக் கூடாது!’ என்ற கடுமையான வாசகம் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தாடி வைக்காதவர்கள் பள்ளியில் தொழக் கூடாது என்று இவர்கள் எழுதுவதில்லை.

மேலும் சில பள்ளிவாசல்களில் ரெடிமேட் தொப்பிகள் வாங்கி வைத்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் தொப்பிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்களா? இதற்கு ஆதாரங்கள் உண்டா? என்பதைக் காண்போம்.

தொப்பி அணிய வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி இல்லாமல் வெறும் தலையுடன் இருந்துள்ளனர் என்பதற்குப் பல சான்றுகள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன.

அவற்றைக் காண்போம்.

(ஒரு நாள்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களுடைய இடத்தில் போய் நின்றதும் தமக்கு குளிப்பு கடமையானது நினைவுக்கு வந்ததால் எங்களைப் பார்த்துஉங்களுடைய இடத்தில் நில்லுங்கள்என்று சொல்லி விட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர் அவர்கள் குளித்து விட்டுத் தலையில் ஈரம் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லி தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 275

புகாரியின் 571 ஆவது அறிவிப்பில்

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் சொட்ட, தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போல் உள்ளது”

என்று இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் குளித்துவிட்டு வரும் போது அவர்களின் தலையில் நீர் சொட்டிக் கொண்டிருந்தது. மேலும் அவர்களின் கையை தலையில் வைத்தவர்களாகவும் வந்துள்ளார்கள். அவர்கள் தொப்பி அணிந்திருந்தால் தம் கையைத் தொப்பியின் மீது வைத்துக் கொண்டு வந்தார்கள் என்று நபித்தோழர் குறிப்பிட்டிருப்பார். அவ்வாறு கூறாததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறும் தலையுடன் தான் வந்து தொழுவித்துள்ளார்கள் என்பதை அறியலாம். மேலும் தலையில் நீர் வடிய தொப்பியணிந்து கொண்டு யாரும் வர மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை திறந்த நிலையில் தான் பெரும்பாலும் இருந்துள்ளர்கள் என்பதைப் பின்வரும் நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலை வாரியவர்களாக இரண்டு சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்களை விட அழகான ஒருவரை அதற்கு முன்பும் பின்பும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர் : பரா (ரலி)

நூல் : நஸாயீ 5219

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் தொப்பி அணிந்திருந்தால் அவர்கள் தலை வாரி இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிய முடியாது. அவர்கள் தலை வாரி இருந்தார்கள் என்ற வாசகம் அவர்களின் தலை திறந்த நிலையில் இருந்தது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமுடி எப்படி இருந்தது?” என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள்,அவர்களது தலைமுடி அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும், தோள்களுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்ததுஎன்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : கதாதா

நூல் : முஸ்லிம் 4666

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமுடி அலையலையானதாகவும் இருந்தது; சுருள் முடியாகவும் இல்லை, படிந்த முடியாகவும் இல்லை என்று கூற வேண்டுமானால் தலை திறந்த நிலையில் அவர்கள் இருந்திருந்தால் தான் பார்த்து அறிவிக்க முடியும்.

ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நரை முடி பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒரு சில நரை முடிகள் கூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்கா விட்டால் சில நரைமுடிகள் தென்படும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸிமாக் பின் ஹர்ப்

நூல் : முஸ்லிம் 4680

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தலையிலும், தாடியிலும் இருபது வெள்ளை முடிகள் கூட இல்லாத நிலையில் அல்லாஹ் அவர்களை இறக்கச் செய்தான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3548

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் முடியை (தமது நெற்றியின் மீது) தொங்க விட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை முடியைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும்) தொங்க விட்டு வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு இறைக் கட்டளை எதுவும் இடப்படவில்லையோ, அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப்போக விரும்பி வந்தார்கள். பிறகு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் (தலை) முடியை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்துக்) கொண்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 3558

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை நரை முடிகள் இருந்தன? எப்படி வகிடு எடுத்தார்கள்? என்றெல்லாம் அறிவிக்க வேண்டுமானால் திறந்த நிலையில் அவர்களின் தலை இருந்திருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமல்லாமல் நபித்தோழர்களும் கூட தலையை மறைக்காதவர்களாகப் பெரும்பாலும் காட்சியளித்துள்ளார்கள் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டு வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளதுஎன்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : நஸாயீ 4980

தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது, “இவர் தம் முடியைப் படிய வைக்கும் பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல்கள் : நஸாயீ 5141, அபூதாவூத் 3540

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ரின் தந்தை) அபூகுஹாஃபா, (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரது தலைமுடியும், தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இதை ஏதேனும் கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : முஸ்லிம் 4270

தலைவிரி கோலமாகவும், தலை வாராமலும், வெள்ளை முடியுடனும் பல நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் முன்னால் வந்த போது எண்ணெய் தேய்த்து தலை வாரச் சொன்னார்களே தவிர, தலைக்குத் தொப்பி அணியுமாறு கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்.

தொப்பி அணிய வேண்டும் என்போரின் ஆதாரங்கள்!

தொப்பி அணிவது சுன்னத் என்று சொல்பவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர். அவற்றின் தரத்தையும், அதன் கருத்தையும் முதலில் காண்போம்.

“…மறுமை நாளில் மக்கள் இவ்வாறு தான் தங்கள் கண்களை உயர்த்திப் பார்ப்பார்கள்’ என்று கூறிவிட்டுத் தமது தலையை உயர்த்தினார்கள். அவர்களின் தொப்பி கீழே விழுந்தது. உமர் (ரலி) அவர்களின் தொப்பியைக் குறிப்பிட்டாரா? அல்லது நபிகள் நயகம் (ஸல்) அவர்களின் தொப்பியையா? என்று எனக்குத் தெரியாது.

அறிவிப்பவர் : ஃபுலாலா பின் உபைத்

நூல்கள் : திர்மிதீ 1568, அஹ்மத் 145

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பி அணிந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் குறை உள்ளதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்தச் செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அபூயஸீத் அல்கவ்லானீ என்பவர் யாரென அறியப்படாதவர்.

(தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 684)

இவர் யார்? இவரின் தகுதிகள் என்பன போன்ற விவரங்கள் கிடையாது. எனவே இது போன்ற முகவரியற்றவர்களின் அறிவிப்புகளை ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இதில் இடம் பெற்றுள்ளார்.

மேலும் இதன் ஐந்தாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் லஹீஆ என்பவரும் பலவீனமானவர்.

(நூல்: அல்லுஃபாவுல் மத்ரூகீன்-நஸயீ, பாகம்: 1, பக்கம்: 64)

எனவே ஆதாரமற்ற இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்துச் சட்டம் இயற்ற முடியாது; இயற்றக் கூடாது.

பின்வரும் ஹதீஸையும் தொப்பிக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

நமக்கும் இணை வைப்பவர்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு, தொப்பிகளின் மீது தலைபாகைகளை அணிவதாகும்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ருக்கானா (ரலி)

நூல்கள் : திர்மிதீ 1706, அபூதாவூத் 3556

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம்களில் ஒருவரான திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியின் தரத்தை அதன் கீழே இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்: “இதன் அறிவிப்பாளர் தொடர் வலிமையானது இல்லை. (இதில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர்) அபுல் ஹஸன் அல்அஸ்கலானீ என்பவரையும் (இரண்டாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் ருக்கானா என்ற) ருக்கானாவின் மகனையும் நாம் யாரென அறிய மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

முகவரியற்ற இரண்டு அறிவிப்பாளர்கள் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இந்தச் செய்தி பலவீனமானது என்று திர்மிதீ அவர்களே தெளிவுபடுத்தி விட்டதால் இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

மேலும் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுபவர்கள், இதை முழுமையாகவும் செயல்படுத்துவதில்லை. இந்தச் செய்தியின்படி தொப்பி அணிந்து அதன் மேல் தலைப்பாகையும் அணிய வேண்டும். இது தான் இந்த ஹதீஸின்படி முஸ்லிம்களின் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. இதை யாரும் செயல்படுத்துவதில்லை. வெறும் தொப்பி மட்டும் அணிந்தால் போதும் என்றே கூறுகின்றனர்.

இனிமேல் இந்தச் செய்தியை ஆதாரம் காட்டுபவர்கள், பள்ளிவாசலில் ரெடிமேட் தொப்பியுடன் தலைப்பாகையும் சேர்த்து வைப்பார்களா?.

பின் வரும் செய்தியையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொப்பிக்கு மேல் தலைப்பாகை அணிவார்கள். (சில நேரங்களில்) தலைப்பாகை இல்லாமல் தொப்பி மட்டும் அணிவார்கள். (சில நேரங்களில்) தொப்பி இல்லாமல் தலைப்பாகை மட்டும் அணிவார்கள்.

நூல்: ஸாதுல் மஆத், பாகம்: 1, பக்கம்: 130

இந்தச் செய்திக்கு எந்த ஆதாரத்தையும் இந்நூல் ஆசிரியர் இப்னுல் கையூம் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இவர் நபித்தோழர் கிடையாது. ஹிஜ்ரி 691-751 ஆண்டில் வாழ்ந்தவர்.

இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்ததைத் தெரிவிக்க வேண்டுமானால் நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆதாரம் காட்ட வேண்டும். அதைச் செய்யாத காரணத்தால் இக்கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. இவர் கூறுவது போல் எந்த ஹதீஸிலும் சொல்லப்படவில்லை.

“அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இஹ்ராம் கட்டியவர் சட்டை அணிய மாட்டார்; முழுக்கால் சட்டை அணிய மாட்டார். புர்னுஸ் அணிய மாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி அணிந்து கொள்ளட்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 134, 5794

இந்தச் செய்தியில் இடம் பெறும் “புர்னுஸ்’ என்ற சொல்லுக்கு தொப்பி என்று மொழிபெயர்த்து, இந்த ஹதீஸ் தொப்பி அணிவதற்கு ஆதாரம் என்று கூறுகின்றனர்.

அதாவது “இஹ்ராம் கட்டியவர் தொப்பியை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இஹ்ராம் கட்டாதவர் தொப்பி அணியலாம் என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தொப்பி இருந்துள்ளதையும் விளங்கலாம்’ என்று கூறுகின்றனர்.

முதலில் “புர்னுஸ்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதைப் பார்க்கலாம்.

1. தலையை மறைத்து உடல் முழுவதும் போர்த்திக் கொள்ளும் ஆடை

2. நீண்ட தொப்பி.

இதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஹஜ் செய்பவர்கள் அணிந்திருந்தனர்.

(நூல்: லிஸானுல் அரப், பாகம்: 6, பக்கம்: 26)

அரபிமொழி அகராதியான லிஸானுல் அரப் என்ற நூலில் இந்த இரண்டு பொருள்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

புகாரியில் இடம் பெறும் புர்னுஸ் என்ற வார்த்தைக்கு நீண்ட தொப்பி என்று பொருள் கொண்டாலும் இவர்கள் அணியும் இந்தத் தொப்பியை அது குறிக்காது. ஏனெனில் தற்போது அணியும் தொப்பி நீண்ட வகை தொப்பி கிடையாது. மிக மிக சிறிய வகை தொப்பியையே அணிகின்றனர்.

மேலும் புகாரியின் இந்த ஹதீஸை வைத்து தொப்பி அணிவது சுன்னத் என்று சொன்னால் அந்த ஹதீஸில் உள்ள மற்ற எல்லாவற்றை அணிவதும் சுன்னத் என்று சொல்ல வேண்டும். சட்டை, முழுக்கால் சட்டை (பேண்ட்) செருப்பு, காலுறை (சாக்ஸ்) இவற்றையெல்லாம் அணிவது சுன்னத் என்று சொல்வார்களா? இல்லையென்றால் இதையும் சுன்னத் என்று சொல்லக் கூடாது.

மேலும் அன்றைய காலத்தில் இருந்த தொப்பி (புர்னுஸ்)யை வைத்து மற்றவர்களைத் தாக்க முடியும். அவ்வளவு பெரியது, கனமானது. இதற்குச் சான்றாக பின்வரும் செய்தி ஆதராமாக அமைந்துள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் புகாரியில் விரிவாக இடம் பெற்றுள்ளது. அதில்

https://www.onlinetntj.com/kelvipathil/thoppiu-anithu-tholum-nanmaigal

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed