*துக்கம் & கவலையின் போது ஓதும் துஆக்கள்*

——————————————————————-

நபி (ஸல்) அவர்கள் துன்பம் ஏற்படும் போது கூறுவதற்காக மற்றொரு பிரார்த்தனையையும் கற்றுத் தந்துள்ளார்கள்.

*லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ஷில் கரீம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது ஓதுவார்கள்*.

பொருள்: (*கண்ணியமிக்கோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.*

*மாபெரும் அர்ஷின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.*

*வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் சிறப்பான அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.*)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6346

*அல்லாஹும்ம இன்னீ அப்து(க்)க வப்னு அப்தி(க்)க வப்னு அம(த்)தி(க்)க நாஸிய(த்)தீ பியதி(க்)க மாலின் ஃபிய்ய ஹுக்மு(க்)க அத்லுன் ஃபிய்ய களாவு(க்)க அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹு ல(க்)க ஸம்மை(த்)த பிஹி நஃப்ஸ(க்)க அவ் அல்லமத்ஹு அஹதன் மின் கல்கி(க்)க அவ் அன்ஸல்(த்)தஹு ஃபீ கிதாபி(க்)க அவ் இஸ்தஃர(த்)த பிஹி ஃபீ இல்மில் கைபி இன்த(க்)க அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ வநூர ஸத்ரீ வ ஜிலாஅ ஹுஸ்னீ வ தஹாப ஹம்மீ*.

பொருள்: ( *இறைவா! நான் உன் அடிமை!*

*உன் அடியாரின் மகன்; உன் அடியாளின் மகன்.*

*என் நெற்றி முடி உன் கையில் இருக்கிறது. உன் முடிவே என்னிடம் நடக்கிறது.*

*உன் தீர்ப்பு என்னிடம் நியாயமானது. குர்ஆனை என்னுடைய இதயத்தின் வசந்தமாகவும் என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும் என் கவலையை களையக் கூடியதாகவும் என் துக்கத்தைப் போக்கக் கூடியதாகவும் நீ ஆக்கி வைக்க வேண்டும்*

என்று உனக்கு நீயே வைத்துக் கொண்ட அல்லது *உனது படைப்பில் நீ யாருக்கேனும் கற்றுக் கொடுத்த அல்லது உன் வேதத்தில் இறக்கியருளியஅல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் தேர்வு செய்த உனக்குரிய ஒவ்வொரு பெயரையும் வைத்துக் கேட்கிறேன்.* )

இவ்வாறு துக்கமும் கவலையும் ஏற்பட்ட ஒருவர் சொன்னால் அல்லாஹ் அவருடைய துக்கத்தையும் கவலையையும் போக்கி விடுகின்றான். அவருக்கு மகிழ்ச்சியை அதற்குப் பகரமாக்கி விடுகின்றான்.

இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதை நாங்கள் கற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்! *அதைச் செவியுற்றவருக்கு அதைக் கற்றுக் கொள்வது அவசியமாகும்* என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி)

நூல்: அஹ்மத் 3528

மீன்வாசி (யூனுஸ் நபி) மீன் வயிற்றில் இருந்த போது செய்த பிரார்த்தனை :

*லா இலாஹ இல்லா அன்(த்)த சுப்ஹான(க்)க இன்னீ குன்(த்)து மினல் ளாலிமீன்*

பொருள்: ( *உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்*)

எந்தவொரு சோதனையிலும் ஒரு முஸ்லிம் இதைக் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவருக்கு அல்லாஹ் பதிலளித்தே விடுகின்றான்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: திர்மிதி 3427

———————-

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *