உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: முஸ்லிம் 78

தடுக்கப்பட்ட காரியங்களைச் செய்யாமல் இருப்பதைப் போல அவை நடைபெறும் இடங்களுக்குப் போகாமல் இருக்கும் போதுதான் நம்முடைய இறைநம்பிக்கை முழுமை பெறும்; உறுதி பெறும். எனவே, வெறுமனே தலைமட்டும் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன் எனச் சொல்லிக் கொண்டு மார்க்கத்திற்கு முரணான இடங்களுக்குச் சென்றுவிடக் கூடாது. குறிப்பாக, வரதட்சனை, பெண் வீட்டு விருந்து போன்றவை இடம்பெறும் திருமணங்களில் பங்கெடுப்பவர்கள் ஒரு கணம் யோசிப்பார்களா?

ஏனெனில், எவரேனும் நற்செயல் புரிவதற்கு நம்மால் முடிந்த வகையில் உதவினால் அச்செயல் மூலம் அல்லாஹ்விடம் அவருக்கு கிடைப்பது போன்று நன்மைகள் நமக்கும் கிடைக்கும். இதேபோன்று தான், தீமை செய்வதற்கு உதவினால் செய்பவருக்கு கிடைப்பது போன்ற தண்டனை உதவுபவருக்கும் கிடைக்கும். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் வாயிலாக அறியலாம்.

நல்லவருடன் இருப்பதற்கும் தீயவருடன் இருப்பதற்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும்! கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது! நீர் அதை விலைக்கு வாங்கலாம்; அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம்! கொல்லனின் உலை உமது வீட்டையோ உமது ஆடையையோ எரித்து விடும்; அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உலகில் வாழும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்; எதற்காகவும் பகைத்துக் கொள்ளக் கூடாதென அவர்கள் செய்யும் பாவமான காரியங்களுக்கு ஒத்தாசை அளித்துவிடக் கூடாது. அவ்வாறு செய்தால் மறுமையில் அவர்களோடு சேர்ந்து நாமும் குற்றவாளிகளாகத் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)

நூல்:புகாரி 2101

அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!

(திருக்குர்ஆன்:37:23)…

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல் உண்டு’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : முஸ்லிம் 1848

குடும்பத்தார், உறவினர், அண்டைவீட்டார், நண்பர்கள் என்று எவராக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதற்கு மார்க்கம் அனுமதி அளிக்கிறது; வலியுறுத்துகிறது. அதேசமயம் அவர்கள் செய்யும் தீமையான காரியங்கள் சிறியதாயினும் பெரியதாயினும் அவற்றுக்கு எந்த வகையிலும் துணைபோய் விடக் கூடாதென கண்டிக்கிறது.

இதைப் புரிந்து, பிறர் செய்யும் நன்மையில் பங்கெடுத்து, தீமையில் விலகி இருந்து ஈருலகிலும் வெற்றி பெறும் பாக்கியத்தை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள்வானாக.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *