திருக்குர்ஆன் கேள்வி பதில்
கேள்வி : மறுமை நாளில் கடவுளாக இட்டுக்கட்டி வணங்கியவைகள் என்னவாகும்?
பதில் : அவர்களை விட்டும் மறைந்துவிடும் (அல்குர்ஆன் 16:87)
கேள்வி : கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபிகளார் கொடுத்தார்கள்?
பதில் : அலீ (ரலி) (ஆதாரம் : புகாரி 3009)
கேள்வி : வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்?
பதில் : அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தோர், குழப்பம் செய்தோர். (அல்குர்ஆன் 16:88)
கேள்வி : அல்லாஹ் யாரைப் பார்த்து வியப்படைவான்?
பதில் : சங்கிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைப் பார்த்து (ஆதாரம் : புகாரி 3010)
கேள்வி : மறுமைநாளில் யாரை எதிரான சாட்சியாக அல்லாஹ் ஆக்குவான்?
பதில் : ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிரான சாட்சியை ஆக்குவான் (அல்குர்ஆன் 16:89)
கேள்வி : அடிமைப் பெண்ணுக்கு அழகிய முறையில் கல்வியும் ஒழுக்கும் கற்பித்து, அவளையே திருமணம் செய்து கொண்டவருக்கு கிடைக்கும் கூலி எவ்வளவு?
பதில் : இரண்டு தடவை கூலி வழங்கப்படும் (ஆதாரம் :புகாரி 3011)
கேள்வி : அல்லாஹ் தடுத்தவை எவை?
பதில் : வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுதல் (அல்குர்ஆன் 16:90)
கேள்வி : போர் களத்தில் யாரைக் கொல்லக்கூடாது?
பதில் : பெண்களையும் குழந்தைகளையும் (ஆதாரம்:புகாரி 3015)
கேள்வி : மோசடி செய்தவற்காக சத்தியம் செய்தால் என்ன ஏற்படும்?
பதில் : உறுதிப்பட்ட பாதம் சறுகிப்போய்விடும் (அல்குர்ஆன் 16:94)
கேள்வி : நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?
பதில் : அல்லாஹ் மட்டுமே (ஆதாரம் : புகாரி 3016)
கேள்வி : அல்லாஹ்வின் பாதையில் செல்வதை தடுத்தால் என்ன ஏற்படும்?
பதில் : தீங்கும் கடும் தண்டனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 16:94)
கேள்வி : பத்ர் போரில் பிடிபட்ட அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபிகளார் யாருடை சட்டை அணிய கொடுத்தார்கள்?
பதில் : நயவஞ்சகனின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை (ஆதாரம் : புகாரி 3008)
கேள்வி : குர்ஆன் ஓதும்போது என்ன செய்ய வேண்டும்?
பதில் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் (அல்குர்ஆன் 16:98)
கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட ஆலயத்தின் பெயர் என்ன?
பதில் : துல் கலஸா (ஆதாரம் : புகாரி 3020)
கேள்வி : ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் எதிரிகள் என்ன கூறினார்கள்?
பதில் : நபி இட்டுக்கட்டி செல்கிறார் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 16:101)
கேள்வி : ஏமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்ட துல்கலஸா ஆலயத்தை உடைத்தவர் யார்?
பதில் : ஜரீர் (ரலி) (ஆதாரம் : புகாரி 3020)
கேள்வி : குர்ஆன் யார் மூலம் இறக்கப்பட்டது?
பதில் : இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் எனும் (ஜிப்ரீல் மூலம்) (அல்குர்ஆன் 16:102)
கேள்வி : யூதனின் தலைவன் அபூ ராஃபிஉ என்பவனை கொன்றவர் யார்?
பதில் : அப்துல்லாஹ் பின் அதீக் (ரலி) (ஆதாரம் : புகாரி 3023)
கேள்வி : யாருக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்?
பதில் : அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு (அல்குர்ஆன் 16:104)
கேள்வி : போர்களத்தின் ஏற்படும் துன்பங்களை பார்க்கும்போது எப்படி இருக்க வேண்டும்?
 
பதில் : நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருக்கு வேண்டும். (ஆதாரம் :புகாரி 3026)
கேள்வி : அல்லாஹ்வை நம்பாதோர் என்ன செய்வார்கள்?
பதில் : பொய்யை இட்டுக்கட்டுவார்கள் (அல்குர்ஆன் 16:105)
கேள்வி : கொடியவன் கஅப் பின் அஷ்ரஃபை கொன்றவர் யார்?
பதில் : முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) (ஆதாரம் : புகாரி 3031)
கேள்வி : அல்லாஹ்வின் கோபமும் வேதனையும் யாருக்கு ஏற்படும்?
பதில் : அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் (அல்குர்ஆன் 16:106)
கேள்வி : மார்பில் அதிக முடியுடையவர்களா இருந்தவர்கள் யார்?
பதில் : நபி (ஸல்) அவர்கள் (ஆதாரம் :புகாரி 3034)
கேள்வி : பசி மற்றும் பயம் எனும் ஆடையை அல்லாஹ் யாருக்கு அணிவித்தான்?
பதில் : பசியும் பயமும் இல்லாமல் இருந்து அல்லாஹ்வை மறந்தவர்களுக்கு (அல்குர்ஆன் 16:112)
கேள்வி : முஆத் (ரலி) அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் நியமித்தார்கள்?
தில் : ஏமன் (ஆதாரம் : புகாரி 3038)
கேள்வி : இறைவனை மட்டும் வணங்குவோர் என்ன செய்வார்கள்?
பதில் : அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துவார்கள் (அல்குர்ஆன் 16:114)கேள்வி : மரம், செடி, கொடிகள் போன்றவை எப்படி இறைவனுக்கு பணிகின்றன?
பதில் : வலப்புறம், இடப்புறம் சாய்ந்து பணிகின்றன. (அல்குர்ஆன் 16:48)
கேள்வி : உடரிலுள்ள மூட்டுகளுக்காக ஒவ்வொரு நாளும் என்ன செய்ய வேண்டும்?
பதில் : தர்மம் செய்ய வேண்டும் (ஆதாரம் : புகாரி 2989)
கேள்வி : மனிதரல்லாதவர்களில் பெருமையடிக்காதவர்கள் யார்?
பதில் : வானவர்கள் (அல்குர்ஆன் 16:49)
கேள்வி : நாட்டுக்கழுதை உண்பதற்கு எப்போது தடைசெய்யப்பட்டது?
பதில் : கைபர் போரின்போது (ஆதாரம் : புகாரி 2991)
கேள்வி : மார்க்கத்தின் சட்டங்களின் அதிகாரம் எல்லா காலங்களிலும் யாருக்குரியது?
பதில் : அல்லாஹ்வுக்கு (அல்குர்ஆன் 16:52)
கேள்வி : நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை என்று எப்போது நபிகளார் கூறினார்கள்?
பதில் : நபித்தோழர்கள் அல்லாஹ்வை சப்தமிட்டு அழைத்தபோது (ஆதாரம் : புகாரி 2992)
கேள்வி : பெண் குழந்தை பிறந்தால் அன்றைய கால மக்கள் எப்படி ஆகி விடுகின்றனர்?
பதில் : முகம் கருத்து, கவலைப்பட்டவர்களாக ஆகி விடுகின்றனர். (அல்குர்ஆன் 16:58)
கேள்வி : எனது (பிரத்தியேக) உதவியாளர் என்று நபிகளார் யாரைக் குறிப்பிட்டார்கள்?
பதில் : ஸுபைர் பின் அவ்வாம் (ரரி) (ஆதாரம் : புகாரி 2997)
கேள்வி : பிறந்த பெண் குழந்தையை என்ன செய்ய துணிந்தனர்?
பதில் : மண்ணில் உயிருடன் புதைக்கத் துணிந்தனர் (அல்குர்ஆன் 16:59)
கேள்வி : இப்னு உமர் (ரரி) அவர்களின் மனைவி பெயர் என்ன?
பதில் : ஸஃபிய்யா பின் அபீ உபைத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3000)
கேள்வி : தீய பண்பு உள்ளவர்கள் யார்?
பதில் : மறுமையை நம்பாதோர் (அல்குர்ஆன் 16:60)
கேள்வி : பயணம் என்பதை நபிகளார் எப்படி குறிப்பிட்டார்கள்?
பதில் : வேதனையின் ஒரு பங்கு (ஆதாரம் : புகாரி 3001)
கேள்வி : மனிதன் செய்யும் தீயசெயல்களுக்கு உடனுக்குடன் தண்டிக்கப்பட்டால் நிலை என்ன?
பதில் : பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான் (அல்குர்ஆன் 16:61)
கேள்வி : பயணத்தின் வேலை முடிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
பதில் : உடன் தம் வீட்டாரிடம் திரும்ப வேண்டும் (ஆதாரம் : புகாரி 3001)
கேள்வி : பால் எங்கு உற்பத்தியாகிறது?
பதில் : கால்நடைகளின் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் உற்பத்தியாகிறது. (அல்குர்ஆன் 16:66)
கேள்வி : தர்மம் செய்த பொருளை திரும்ப விலைக்கு வாங்கலாமா?
பதில் : கூடாது (ஆதாரம் : புகாரி 3002)
கேள்வி : தேன் எங்கு உற்பத்தியாகிறது?
பதில் : தேனியின் வயிற்றிரிருந்து (அல்குர்ஆன் 16:69)
கேள்வி : நபிகளாரின் விவரங்களை மக்காவிற்கு எடுத்து சென்ற பெண்ணை பிடித்து வருமாறு யாரை நபிகளார் அனுப்பினார்கள்?
பதில் : அலீ (ரரி), மிக்தாத் (ரரி) (ஆதாரம் : புகாரி 3007)
கேள்வி : அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூறலாமா?
பதில் : கூடாது (அல்குர்ஆன் 16:74)
கேள்வி : மக்காவில் கடிதம் கொண்டு சென்றபெண்மணி எந்த இடத்தில் இருப்பதாக நபிகளார் கூறினார்கள்?
பதில் : ரவ்ளத்துக்காக் (ஆதாரம் : புகாரி 3007)
கேள்வி : மறுமை நாள் எவ்வளவு நேரத்தில் வரும்?
பதில் : கண்மூடித் திறப்பதுபோல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். (அல்குர்ஆன் 16:77)
கேள்வி : மக்கா வாசிகளுக்கு கடிதம் கொடுத்த நபித்தோழர் யார்?
பதில் : ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி). (ஆதாரம் : புகாரி 3007)
கேள்வி : இறைவன் வீடுகளை ஏற்படுத்தியது எதற்கு?
பதில் : நிம்மதியடைவதற்கு. (அல்குர்ஆன் 16:80)
கேள்வி : உளவு சொன்ன ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரரி) அவர்களை என்ன செய்வதாக உமர் (ரலி) கூறினார்கள்?
பதில் : அவரின் கழுத்தை வெட்டிவிடுவதாக கூறினார்கள் (ஆதாரம் : புகாரி 3007)
கேள்வி : இறைச் சட்டங்களில் நபியின் கடமை என்ன?
பதில் : தெளிவாக எடுத்துச் சொல்வதே! (அல்குர்ஆன் 16:82)
கேள்வி : ஹாத்திப் பின் அபீபல்தஆ (ரரி) அவர்களுக்கு தண்டனை ஏன் நபிகளார் வழங்கவில்லை?
பதில் : பத்ர் போரில் அவர்கள் கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையின் காரணமாக (ஆதாரம் : புகாரி 3008)
கேள்வி : வேதனை காணும்போது தண்டனை இலேசக்கப்படுமா?
பதில் : வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள் (அல்குர்ஆன் 16:85)
கேள்வி : ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்?
பதில் ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62)
கேள்வி : ஸாலிஹ் (அலை) அவர்களின் கூட்டத்தினர் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள்?
பதில் ! பெரும் சப்தத்தால் (அல்குர்ஆன் 11:67)
கேள்வி : உலகை விட்டுப் பிரியும்வரை யாரிடமும் கையேந்த மாட்டேன் என்று சத்தியமிட்ட நபித்தோழர் யார்?
பதில் ! ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) (ஆதாரம் : புகாரி 2750)
கேள்வி : தம்மிடம் வந்த வானவர்களுக்கு எந்த விருந்து வைத்தார்கள் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள்?
பதில் ! பொரித்தக் கன்றை கொடுத்தார்கள் (அல்குர்ஆன் 11:69)
கேள்வி : பணியாளன் எதற்கு பொறுப்பாளி?
பதில் ! தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளனாவான். (ஆதாரம் : புகாரி 2751)
கேள்வி : வானவர்களை மனித தோற்றத்தில் கண்ட நபி இப்ராஹீம் (அலை) என்ன ஆனார்கள்?
பதில் ! பயந்துவிட்டார்கள் (அல்குர்ஆன் 11:70)
கேள்வி : தோட்டத்தை தர்மம் செய்து தன் தாயின் நன்மைக்கு வழிவகுத்தவர் யார்?
பதில் ! ஸஅத் பின் உபாதா (ரலி) (ஆதாரம் : புகாரி 2756)
கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வந்த வானவர்கள் என்ன சொன்னார்கள்?
பதில் ! நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு குழந்தை
பிறக்கப் போகிறது என்ற நற்செய்தியை கூறினார்கள். (அல்குர்ஆன் 11:71)
கேள்வி : தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா எனும் தோட்டத்தை தர்மம் செய்தவர் யார்?
பதில் ! அபூதல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2758)
கேள்வி : நற்செய்தி கேட்ட நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மனைவி என்ன கூறினார்கள்?
பதில் ! “இது என்ன அதிசயம்! நான் கிழவியாகவும், இதோ எனது கணவர்
கேள்வி : கிழவராகவும் இருக்கும்போது பிள்ளை பெறுவேனா?
பதில் ! இது வியப்பான செய்திதான்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 11:72)
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஓய்வு எடுக்கும் தோட்டம் எது?
பதில் ! பைருஹா தோட்டம் (ஆதாரம் : புகாரி 2758)
கேள்வி : இப்ராஹீம் (அலை) அவர்களின் குணம் எப்படி?
பதில் ! சகிப்புத் தன்மை மிக்கவராகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்கள். (அல்குர்ஆன் 11:75)
கேள்வி : அனஸ் (ரலி) அவர்கள், நபிகளாருக்கு பணிவிடை செய்யச் சொன்னவர் யார்?
பதில் ! அபூ தல்ஹா (ரலி) (ஆதாரம் : புகாரி 2768)
கேள்வி : ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவந்த மக்களிடம் நபி லூத் அவர்கள் என்ன கேட்டார்கள்?
பதில் ! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன்கூட இல்லையா?
என்று கேட்டார்கள். (அல்குர்ஆன் 11:78)
கேள்வி : மஸ்ஜித் நபவி இருக்கும் இடம் எந்த குலத்தைச் சார்ந்தவர்களுக்கு சொந்தமானது?
பதில் ! பனூ நஜ்ஜார் (ஆதாரம் : புகாரி 2774)
கேள்வி : லூத் (அலை) அவர்களின் சமூகத்தினர் எவ்வாறு அழிக்கப்பட்டனர்?
பதில் ! சுடப்பட்ட கற்களால் கல் மழை பொழிந்து, அதன் மேற்பகுதியை கீழ்ப்பகுதியாக ஆகப்பட்டது. (அல்குர்ஆன் 11:82)
கேள்வி : ரூமா என்ற கிணறை விலைக்கு வாங்கி தூர் வாரி மக்களுக்கு தர்மம் செய்தவர் யார்?
பதில் ! உஸ்மான் (ரலி) (ஆதாரம் : புகாரி 2778)
கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் எந்த நகருக்கு இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள்?
பதில் ! மத்யன் (அல்குர்ஆன் 11:84)
 
கேள்வி : பெண்களுக்குரிய சிறந்த அறப்போர் எது?
பதில் ! பாவம் கலவாத ஹஜ் (ஆதாரம் : புகாரி 2784)
கேள்வி : ஷுஐப் (அலை) அவர்கள் கூட்டத்தினர்வியாபாரத்தில் என்ன தவறு செய்தார்கள்?
பதில் ! அளவையிலும், நிறுவையிலும் மோசடி செய்தனர். (அல்குர்ஆன் 11:85)
கேள்வி : ஜிஹாத்திற்கு நிகரான நற்செயல் எது?
பதில் ! எதுவும் இல்லை (ஆதாரம் : புகாரி 2785)
கேள்வி : தொழுகை எதை கட்டளையிடுவதாக ஷுஐப் (அலை) அவர்களின் கூட்டத்தினர் கூறினர்?
பதில் ! எங்கள் முன்னோர்கள் வணங்கியதையும்,எங்கள் பொருட்களில் நாங்கள் விரும்பியவாறு செயல்படுவதையும் விட்டுவிட கட்டளையிடுகிறதா? (அல்குர்ஆன் 11:87)
கேள்வி : வானுலகில் வானவர்கள் வணங்குவதற்காக அமைக்கப்பட்ட ஆலயம் எது?
பதில் ! பைத்துல் மஃமூர் (ஆதாரம் : புகாரி 3207)
கேள்வி : ஷுஐப் (அலை) அவர்களின் போதனைப் பற்றி அவர்களின் கூட்டத்தினர் என்ன கருத்து கூறினர்?
பதில் ! நீர் கூறுவதில் அதிகமானவை எங்களுக்குப் புரியவில்லை. எங்களில் பலவீனராகவே உம்மை நாங்கள் கருதுகிறோம். (அல்குர்ஆன் 11:91)
கேள்வி : சொர்க்கத்தின் மிகச்சிறந்த சொர்க்கம் எது?
பதில் ! பிர்தவ்ஸ் (ஆதாரம் : புகாரி 2790)
கேள்வி : உமது குலத்தார் இல்லாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம் என்று கூறியதற்கு ஷுஐப் (அலை) அவர்கள் என்ன பதிலளித்தார்கள்?
பதில் ! “என் சமுதாயமே! என் குலத்தவர் அல்லாஹ்வைவிட உங்களுக்கு மதிப்பு மிக்கவர்களா? (அல்குர்ஆன் 11:92)
கேள்வி : சொர்க்கத்தில் ஒரு வில்லுக்கு சமமான இடம் கிடைப்பது?
பதில் ! உலகத்தைவிட சிறந்தது (ஆதாரம் : புகாரி 2793)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed