தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ 2392

மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொண்டு தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதும் வழக்கம் சிலரிடம் உள்ளது. ஆனால் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல.

இச்செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும்.

இந்த செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து

அபூ ளப்யா என்பவரும்

அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும்

அறிவிக்கின்றனர்.

இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படாத முகவரி அற்றவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்படவில்லை என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல் : மீஸானுல் இஃதிதால் பாகம் : 7 பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான் பாகம் : 7 பக்கம் : 60

அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டியது; இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா பாகம் : 1 பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

தினமும் இரவில் ஓதுவதற்கு பல துஆக்கள் உள்ளன. அவற்றை அறிய துஆக்களின் தொகுப்பு நூலை வாசிக்கவும்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed